ஜியோ போன் வாங்க விருப்பமுள்ளவர்களுக்கு ஜியோவின் அலர்ட்! | Jio launches keep me posted form for Jio phone

வெளியிடப்பட்ட நேரம்: 15:09 (24/07/2017)

கடைசி தொடர்பு:15:09 (24/07/2017)

ஜியோ போன் வாங்க விருப்பமுள்ளவர்களுக்கு ஜியோவின் அலர்ட்!

இந்திய டெலிகாம் சந்தையில் தற்போது கலக்கிக்கொண்டிருக்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், சமீபத்தில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தியது. 'இந்தியாவின் ஸ்மார்ட்போன்' என்ற விளம்பரத்தோடு அறிமுகமாகியிருக்கும் 'ஜியோ போன்', 4ஜி உள்பட பல வசதிகளுடன் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.

ஜியோ போன்


வாடிக்கையாளர்கள் 1,500 ரூபாய் செலுத்தி இந்த ஸ்மார்ட்போனைப் பெற்றுக்கொள்ளலாம். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத்தொகையானது வாடிக்கையாளர்களுக்குத் திருப்பித்தரப்படும் என்பதால், இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.0 என ரிலையன்ஸ் நிறுவனம் விளம்பரப்படுத்தி வருகிறது. ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் ப்ரி-புக்கிங் செய்யப்படவிருக்கும் இந்த மொபைல் போனை வாங்க விருப்பமுள்ளோர், அந்நிறுவனத்தின் Jio.com தளத்தில் பதிவு செய்தால் விற்பனை குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

Jio Phone Keep me posted form

விருப்பமுள்ளவர்கள் தங்களது பெயர், இமெயில் ஐடி மற்றும் மொபைல் போன் எண்ணைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். அதன்பின், பதிவு செய்யப்பட்டதை உறுதிசெய்ய அந்நிறுவனத்திடமிருந்து மெயில் மற்றும் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. ஜியோ போன் விற்பனை மற்றும் இதற்கு வழங்கப்படும் ஆஃபர்கள் குறித்த அனைத்து விதமான அப்டேட்களும் வாடிக்கையாளருக்கு அனுப்பிவைக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க