வெளியிடப்பட்ட நேரம்: 17:11 (24/07/2017)

கடைசி தொடர்பு:17:11 (24/07/2017)

பன்றிக் காய்ச்சல் காரணமாக அதிக மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது தமிழகத்தில்தான்...

ஹெச்1 என்1 (H1N1) என்று அழைக்கப்படும் பன்றிக் காய்ச்சல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 2,896 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா கூறி உள்ளார்.

பன்றி காய்ச்சல்


பன்றிக் காய்ச்சல் காரணமாக இந்தியா முழுவதும் 2017-ம் ஆண்டில் 13,188 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 632 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் இந்த ஆண்டில் 2,896 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மஹாராஷ்ட்ராவில் 2,738பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 284 பேர் இறந்துள்ளனர். குஜராத்தில் 289 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 75 பேர் இறந்துள்ளனர். கேரளாவில், 1,127 பேருக்குப் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. அவர்களில் 63 பேர் இறந்துள்ளனர். ராஜஸ்தானில், 407 பேர் பாதிக்கப்பட்டதில், 59 பேர் இறந்துள்ளனர். கர்நாடகாவில் 2,377 பேர் பாதிக்கப்பட்டதில், 15 பேர் இறந்துள்ளனர். தெலுங்கானாவில் 1,443 பேர் பாதிக்கப்பட்டதில் 17 பேர் இறந்துள்ளனர்.

பன்றிக் காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுப்பதுக்காக Oseltamivir, என்ற மருந்து அனைத்து அரசு அனுமதி பெற்ற மருந்துக்கடைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. குஜராத், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதுக்காக மத்திய குழு அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு இந்தியா முழுவதும் 42,592 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 2,990 பேர் இறந்தனர். கடந்த ஆண்டில் இந்தியா முழுவதும் 265 பேர் பன்றிக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க