Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'தப்பிக்க இவர்கள் எதைவேண்டுமானாலும் செய்வார்கள்'- சாடும் அன்புமணி

அன்புமணி

''அ.தி.மு.க, தி.மு.க. இரண்டு கட்சிகளுமே சுயநலவாதிகள். சொந்தப் பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ள அவர்கள் எந்த முடிவையும் எடுப்பார்கள். தமிழ்நாட்டு நலனில் அவர்களுக்கு அக்கறை கிடையாது'' என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி குற்றம் சாட்டினார்.

மத்திய முன்னாள் ரயில்வே இணையமைச்சர் அரங்க வேலு  எழுதிய "என் வாழ்க்கைப் பயணம்"  என்ற தன் வரலாற்று நூல் வெளியீட்டு விழா சென்னையில் கவிக்கோ அரங்கத்தில் இன்று  நடைபெற்றது. விழா முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, ''ஜல்லிகட்டு பிரச்னையில் 6 நாளில் தமிழக அரசின் சட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தது. இப்போது, நீட் தேர்வு விலக்கு அளிக்கும் சட்டத்துக்கு 6 மாதங்கள் ஆகியும் ஒப்புதல் இல்லை. அந்தச் சட்டத்தின் கதி என்னவென்று சொல்லவே மத்திய அரசு மறுக்கிறது. கடந்த ஆண்டு தமிழக அரசின் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் 2,318 மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டன. அவற்றில் 2,279 இடங்களை மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் கைப்பற்றினர். சி.பி.எஸ்.இ பாடத்திட்ட மாணவர்களுக்கு 16 இடங்களும், ஐ.சி.எஸ்.இ பாடத்திட்ட மாணவர்களுக்கு 3 இடங்களும், பிறப் பாடத்திட்ட மாணவர்களுக்கு 20 இடங்களும் கிடைத்தன.

இந்த ஆண்டு, நிரப்பப்படவுள்ள 3,377 இடங்களில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் சி.பி.எஸ்.இ மாணவர்களுக்குக் கிடைக்கும். எனவேதான் நீட் வேண்டாம் என்கிறோம். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தர வேண்டும் என்று மனு கொடுத்துள்ளேன். ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிப்பதற்கு ஒரு நிபந்தனையாக நீட் தேர்வு விலக்கு கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்று பா.ம.க ஏற்கெனவே வலியுறுத்தியது. இப்போது துணை ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. எனவே, தேவையான அழுத்தம் இப்போதாவது கொடுக்க வேண்டும். ஆனால், அதை அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் செய்யாது. அவர்கள், தங்களின் சொந்த பிரச்னைகளில் இருந்து தப்பிக்க எதைவேண்டுமானாலும் செய்வார்கள். அவர்களுக்குத் தமிழக மக்கள் நலன் மீது  அக்கறை இல்லை. அவர்கள் சுயநலவாதிகள். இன்னும் சொல்லப்போனால், ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக தமிழக மாணவர்களின் நலன்களை மத்திய அரசிடம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பினாமி அரசு நிரந்தரமாக அடகு வைத்து விட்டது'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement