ஃபேஸ்புக்கில் தாய்மார்கள் உருவாக்கியிருக்கும் பக்கம்!

தாய்மார்கள்

சென்னையைச் சேர்ந்த பாரதி, வஹிதா, ஐஸ்வர்யா, சரண்யா என நான்கு தாய்மார்கள் இணைந்து, 'நேச்சுரல் பேரண்டிங் கம்யூனிட்டி' (NATURAL PARENTING COMMUNITY) என்கிற ஃபேஸ்புக் பக்கத்தைக் கடந்த 2015-ம் ஆண்டு ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த குரூப்பில் குழந்தைகள் நல மருத்துவர்கள், மனநல ஆலோசகர்கள் என தமிழகத்தின் பல துறைகளைச் சேர்ந்த பலதரப்பட்ட பெண்கள் இணைந்திருக்கிறார்கள். மாதத்துக்கு ஒருமுறை குழந்தை வளர்ப்பு பற்றியும், பச்சிளம் குழந்தைகளுக்கு உடை மாற்றுவது முதல், பாலூட்டுவது வரை  என குழந்தை வளர்ப்பில் தாய்மார்கள் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்களை நேரடியாகச் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

மேலும், ஃபேஸ்புக் பக்கத்தில் தாய்மார்களுக்கு ஏற்படும் சந்தேகங்களையும் பதிவிட்டு அதற்கான பதிலைப் பெறலாம். இந்த குரூப்பில் இதுவரை 5,500 பேருக்கும் மேல் இணைந்திருக்கிறார்கள். 'நியூக்ளியர் ஃபேமிலியாக வாழ்ந்து வரும் பல பெற்றோர்களுக்கு, குழந்தை வளர்ப்பு கடினமாகத்தான் இருக்கும். அதை மனதில் கொண்டுதான் இப்படியொரு முயற்சியை எடுத்தோம். இன்று பல தாய்மார்கள் இதன் மூலம் பயன்பெறுகிறார்கள்' என்கிறார் இந்த ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான வஹிதா.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!