வெளியிடப்பட்ட நேரம்: 17:51 (24/07/2017)

கடைசி தொடர்பு:17:51 (24/07/2017)

இந்தியப் பெண்கள் ஏன் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட வேண்டும்?- ஆய்வு முடிவு சொல்லும் அதிர்ச்சித் தகவல்!

குழந்தைகள் மற்றும் பெண்கள் குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து சரிசமமான உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றன ஆய்வு முடிவுகள்.

பெண்கள்


30,000 பேரை வைத்து எடுக்கப்பட்ட ஆய்வில், 403 பெண்களை ஆராய்ந்ததில், இரண்டு மடங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் ஊட்டச்சத்தின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. தென்மேற்கு ராஜஸ்தானைச் சேர்ந்த கிராமத்தின் வழக்கப்படி, வீட்டில் உள்ள ஆண்கள் முதலில் சாப்பிட வேண்டும், அடுத்தது, குழந்தைகள், இறுதியாகத்தான் மீதமிருக்கும் உணவு வீட்டில் உள்ளப் பெண்கள் சாப்பிட வேண்டும். முக்கியமாக தாய்மார்கள். இது எழுதப்படாத சட்டமாக இருந்து வருகிறது. இந்தியாவின் பல கிராமங்களில் பின்பற்றப்படும் வழக்க இது. இதனால் பெண்கள் மற்றும் தாய்மார்களுக்குப் போதிய ஊட்டச்சத்தில்லாமல் பாதிக்கப்படுகிறார்கள்.
 
 End of Childhood Report 2017ன் படி, ஊட்டச்சத்தின்மையால் பாதிக்கப்படும் குழந்தைகளின் உயரமானது அவர்களின் வயதிற்கேற்ற வளர்ச்சியைவிடக் குறைவாக இருக்கும். மேலும், சமூகத்தில் அவர்களால் இணைந்து செயல்பட முடியாது என்பதோடு வேலை விஷயத்திலும் பின்தங்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இது போல, இந்தியாவில் ஊட்டச்சத்தின்மையால் இறக்கும் குழந்தைகளின் இறப்பு விகிதம் 50%  இருப்பதாகவும் தெரித்துவித்துள்ள IndiaSpend ரிப்போர்ட். Freedom From Hunger India Trust ன் சி.இ.ஒ சரஸ்வதி ராவ், 'நாங்கள் பார்த்தவரை இந்தியாவில் உள்ள குடும்பங்களின் ஆண்கள்தான் அதிக அளவு உணவினை எடுத்துக் கொள்கிறார்கள். மிகக் குறைவான ஊட்டச்சத்து உணவையே குழந்தைகளும், பெண்களும் ஒவ்வொரு குடும்பத்திலும் எடுத்துக் கொள்கிறார்கள்' என்கிறார். இது குறித்து கடந்த இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்ட ஆய்வின் பேரில் இந்த டேட்டா வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஊட்டச்சத்து விஷயத்தில் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பல விஷயங்களை வலியுறுத்தி வருகின்றன. அதில் மிக முக்கியமானது, குழந்தைகள் மற்றும் பெண்களும் குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து சரிசமமான உணவினை எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க