வெளியிடப்பட்ட நேரம்: 19:54 (24/07/2017)

கடைசி தொடர்பு:19:54 (24/07/2017)

போய் வா ’பெயின்ட்’டே போய் வா! விடை கொடுக்கப்போகும் விண்டோஸ் 10-ன் அடுத்த அப்டேட்!

 பிரபல இயங்குதள நிறுவனமான மைக்ரோசாப்ட் விண்டோஸ் நிறுவனம், தனது அடுத்த விண்டோஸ் 10 அப்டேட்டில் பெயின்ட்  அப்ளிகேஷனை நீக்க முடிவு செய்துள்ளது.

பெயிண்ட்

கணினி உலகில் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்று சிறந்து விளங்கும் நிறுவனம் மைக்ரோசாப்ட் விண்டோஸ். இந்நிறுவனம் விண்டோஸ் இயங்குதள வரிசையில் சமீபத்தில் விண்டோஸ் 10-ஐ அறிமுகப்படுத்தியது. கடந்த இயங்குதள வெர்ஷனான விண்டோஸ் 8-ல் கடினமாக உணரப்பட்ட மெனு ஆப்ஷன்கள் உட்பட சில விஷயங்கள் மாற்றப்பட்டன. முந்தைய மாடலை விட சொளகரியமாகவும், பாதுகாப்பானதாகவும் உருவாக்கப்பட்டது. மொபைல் இயங்குதள உலகில் தனது இடத்தை தவற விட்டாலும், கணினி உலகில் தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் விண்டோஸ் 10 அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காகக் கூடுதல் வசதிகளுடன் சில அப்டேட்களையும் அறிமுகப்படுத்தியது. இந்த விண்டோஸ் 10-ன் அடுத்த அப்டேட்டில் கடந்த 32 வருடங்களாக உபயோகத்தில் இருந்த பெயின்ட் அப்ளிகேஷன் ப்ரோகிராமை நீக்கையுள்ளதாக மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது. ‘பெயின்ட்’, 1985-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.