Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்குச் சரியான நபரைத் தேர்ந்தெடுக்க உச்ச நீதிமன்ற நீதிபதி  ஆர்.எம். லோதா தலைமையிலான மூன்று நபர் கொண்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்வுக்குழு 'அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன' என்று அறிவித்து இருக்கிறார்கள். 

துணைவேந்தர் அண்ணா பல்கலைக்கழகம்

துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் பல்கலைக்கழக மானியக்குழுவின் அறிவுறுத்தப்பட்ட விதிமுறைகளைக் கடைப்பிடித்திருக்க வேண்டும் என்றும், இன்ஜினீயரிங், தொழில்நுட்பம் அல்லது அறிவியல் பிரிவில் முனைவர் பட்டத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இருபது ஆண்டுகள் ஆசிரியராகப் பணி செய்து இருக்க வேண்டும், பேராசிரியராகக் குறைந்தது பத்து ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும், முனைவர் பட்டம் பெற்ற பின்பு பல்கலைக்கழக மானியக்குழு பட்டியலிட்டுள்ள ஆராய்ச்சி இதழ்களில் குறைந்தது ஐந்து ஆராய்ச்சி கட்டுரைகளையாவது வெளியிட்டு இருக்க வேண்டும் என்றெல்லாம் முதன்மை தகுதியாக நிர்ணயித்து இருக்கிறார்கள். 

மூன்று நபர் தேர்வுக்குழுவில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி என் சுந்தரதேவன், கான்பூர் ஐஐடியின் முன்னாள் இயக்குநர் பத்மநாபன் ஆகியோர்களும் இடம்பிடித்து இருக்கிறார்கள். 'அண்ணா பலகலைக்கழக துணைவேந்தர் பணிக்கு தேசிய அளவில் விளம்பரம் செய்து இருக்கிறோம். தேசிய அளவில், சர்வதேச அளவிலும் பணியாற்றி வரும் கல்வியாளர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஆகஸ்ட் 21-ம் தேதியாகும் ' என்று அறிவித்து இருக்கிறது உயர்கல்வித் துறை. 

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்குத் தமிழக அரசு அமைத்திருந்த தேர்வுக்குழு பரிந்துரை செய்த மூன்று பேராசிரியர்களில் ஒருவரையும் தேர்வு செய்யாமல் திருப்பி அனுப்பிய தமிழக ஆளுநர் வித்யா சாகர் ராவ், புதிய தேர்வுக் குழுவை அமைத்தது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close