கடத்தப்பட்ட இந்தியர்களின் கதி - ஆளுக்கொரு கருத்துகள் சொல்லும் வெளியுறவு அமைச்சர்கள்

ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்களின் கதி என்ன ஆனது எனத் தெரியவில்லை என்று ஈராக் வெளியுறவுத்துறை அமைச்சர் இப்ராஹிம் அல் ஜப்பாரி தெரிவித்துள்ளார். அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா அல்லது கொல்லப்பட்டுவிட்டார்களா என்றுகூட உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் அதேநேரம் அவர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈராக் அரசு ஈடுபட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.

ஐஎஸ்  

"100 சதவிகிதம் உறுதியாக அவர்கள் உயிருடன்தான் இருக்கிறார்கள் என்றோ இறந்து விட்டார்கள் என்றோ கூற முடியாது. இன்று வரை அரசால் முடிந்ததை மிகச்சிறப்பாகச் செய்து வருகிறோம். இப்போதைக்கு எந்த முன்முடிவும் கூறமுடியாது. 39 பேர்களை விரைவில் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்" என்று அவர் தெரிவித்தார். இந்நிலையில், இந்தியாவில் உள்ள ஈராக் தூதரகம், "கடத்தப்பட்டுள்ள 39 இந்தியர்களைக் கண்டுபிடிக்கும் பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டும் வருகிறோம்" என்று இந்திய அரசுக்குத் தெரிவித்துள்ளது. 

கடத்தப்பட்டவர்களின் குடும்பங்களை இன்று சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களிடையே பேசும் போது, "கடத்தப்பட்ட 39 பேரும் கடைசியாக பதூஷ் நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அரசுப்படைகள் அந்த நகரை மீட்க உள்ளது. அதன் பின்னர் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்" என்று அவர்களிடம் தெரிவித்தார். 

ஈராக் வெளியுறவுத்துறை அமைச்சரின் கூற்று நம்பிக்கையில்லாமலும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் கூற்று நம்பிக்கையுடனும் வெளிப்பட்டுள்ளது.   

Don't miss this

Do you like the story?

Please Appreciate the Author by clapping!