Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"குண்டர் சட்டத்தில் எடப்பாடியைக் கைதுசெய்யுங்கள்!"

கதிராமங்கலம் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகத் துண்டு பிரசுரம் வழங்கிய குற்றத்துக்காக, மாணவி வளர்மதி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். பின்னர், அவர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கோவை சிறைக்கு அனுப்பப்பட்டார். இந்த விவகாரம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதேபோன்று, பேராசிரியர் ஜெயராமன், கதிராமங்கலத்தில் போராட்டம் நடத்தியதால், ஜூன் மாதம் 30-ம் தேதி கைதுசெய்யப்பட்டார்.

முதல்வர் பழனிசாமி

 

இதைத் தொடர்ந்து, 'தமிழகத்தில் போராட்டத்தைத் தூண்டுவோர்மீது குண்டர் சட்டம் பாயும்' என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சமீபத்தில் அறிவித்தார்.

இந்த நிலையில், 'மதுக்கடை, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற  விவசாயத்தை அழிக்கும் மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு எதிராகப் போராடிவரும் மக்களைப் போராடத் தூண்டுவதே முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான். அதனால், போராட்டத்தைத் தூண்டி விடும் எடப்பாடி பழனிசாமியைக் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யுங்கள்' என்று மதுரை மாவட்ட கலெக்டரிடம் இளைஞர்கள் இன்று மனு கொடுத்து அதிரவைத்தார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close