இந்தச் சிரிப்புக்குப் பின்னால் எத்தனை எத்தனை துயரம்!

பல ஆண்டுகளாக எழ முடியாமல் படுத்த படுக்கையாகிக் கிடந்த பெண், இவ்வளவு உற்சாகமாக சிரித்துக்கொண்டிருக்கிறார் என்றால், பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது அல்லவா? இந்தச் சிரிப்புக்காக அவர் சந்தித்த துயரங்களை விவரிக்க நிச்சயமாக வார்த்தைகள் இல்லை!

அதிக எடை கொண்ட பெண் இமான்

எகிப்தைச் சேர்ந்த இமான் அகமதுவின் எடை, இரண்டரை மாதங்களுக்கு முன் 500 கிலோவாக இருந்தது. எந்தப் பெண்ணும் வாழ்க்கையில் விரும்பாத பட்டமும் அவருக்குக் கிடைத்தது. அதாவது, உலகிலேயே அதிக எடைகொண்ட பெண் என்கிற பட்டம். இரு கைகள் இருந்தும் கையை  அசைக்க முடியாத நிலை என்றால், எத்தகைய வேதனையான விஷயம். அப்படிப்பட்ட நிலையில், இமான் மும்பைக்குக் கொண்டுவரப்பட்டார். மும்பையில் உள்ள சைஃபி மருத்துவமனையில் முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அமீரகத்தில் உள்ள அபுதாபி புர்ஜில் மருத்துமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். மும்பையிலிருந்து புறப்படும்போது இமானின் எடை 242 கிலோ. 

அதிக எடை கொண்ட பெண் இமான்

அபுதாபி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையால், மிகவும் எடை குறைந்துவிட்டார் இமான். அவரால் கை, கால்களை அசைக்க முடிகிறது. உணவை அவரே எடுத்துச் சாப்பிடுகிறார். படுக்கையில் எழுந்து  உட்கார முடிகிறது. மருந்துகள்கூட அவரே எடுத்துக் கொள்கிறார். இமானின் முன்னேற்றம்குறித்து புர்ஜில் மருத்துவமனை நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டது. வீடியோவில், மிகுந்த மகிழ்வுடன் உற்சாகமாக இருக்கிறார் இமான். அடுத்தகட்ட சிகிச்சையில் இமானின் எடையை 100 கிலோவுக்குள் கொண்டு வர மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர். இமான் எழுந்து நடக்கத் தொடங்கியதும் அவருக்கு வேறு பணி காத்திருக்கிறது. உலகம் முழுக்க பயணம் செய்து. உடல்பருமன்குறித்து விழிப்புஉணர்வில் அவரை ஈடுபடுத்த, புர்ஜில் மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

மும்பை மற்றும் அபுதாபி மருத்துவமனைகள், மனிதாபிமான அடிப்படையில் இமானுக்கு இலவசமாகவே சிகிச்சை அளித்துள்ளன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!