Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குவாரிகள்மூலம் பரவும் டெங்கு: அச்சத்தில் மதுரை மக்கள்!

 

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில், மீண்டும் டெங்கு காய்ச்சல் மிரட்டிவருகிறது . சில ஆண்டுகளுக்கு முன், மேலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவி, நூற்றுக்கணக்கான நபர்கள் டெங்குவின் வீரியத்தால் உயிரிழந்தனர் . இதன் காரணங்களைக் கண்டறிய சமூக அமைப்புகள் களம் இறங்கின . அதில், மேலூர் பகுதியில் உள்ள குவாரிகளில்  கிரானைட் கற்களைத் தொடர்ந்து எடுத்து வந்ததால், அதிகப்படியான குவாரி பள்ளங்கள் உருவாகின.

கிரானைட் குவாரி

மழைப்பொழிவு அதிகமாகும்போது, அந்தப் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி, பூமிக்குள் இறங்காமல் பாறைகளிலேயே நின்றுவிடும். அந்த நீர் அங்கே தேங்குவதால், கோடிக்கணக்கான ஏ.டிஸ் கொசுக்கள் உருவாகி, மேலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு டெங்குவைப் பரப்புகிறது எனத் தகவல்களில் தெரியவந்தது. அதற்குப் பின், மேலூர் நகராட்சி மற்றும் பிற மாவட்ட மருத்துவக் குழுவின் உதவியோடு சிகிச்சை மேற்கொண்டு கண்டுபிடித்தனர். தற்போது பெய்த மழைப்பொழிவுக்குப் பிறகு, மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவிவருவதால், அந்தப் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.  மேலூர் தொகுதி எம்.எல்.ஏ நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement