Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'கக்கூஸ்' ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி கைது!

திவ்யபாரதி

சமூக செயற்பாட்டாளரும் கக்கூஸ் ஆவணப்பட இயக்குநருமான திவ்யபாரதி, பழைய வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளார். 2009-ம் ஆண்டு மாணவராக இருந்தபோது போராட்டத்தில் ஈடுபட்டதுக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். '2009-ல் போடப்பட்ட மாணவர் போராட்ட வழக்குக்கு, அரெஸ்ட் வாரன்ட் வழங்கி, சற்று முன் வீட்டுக்கு வந்து காவலர்கள் மதுரை ஜே.எம்.-2 நீதிமன்றத்தில் என்னை ஆஜர் படுத்தி இருக்கிறார்கள்' என்று திவ்யா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

திவ்யபாரதி மாணவராக இருந்தபோதே திவ்யா பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். அண்மையில் அவர் எடுத்த, கக்கூஸ் என்ற ஆவணப்படம் துப்புரவுப் பணியாளர்களின் வேதனைகளை பதிவு செய்திருந்தது. குறிப்பாக, கக்கூஸ் படத்தை திரையிட தமிழக அரசு தடை விதித்தது. சமூக செயற்பாட்டுக்காக சமீபத்தில் பெரியார் சாக்ரடீஸ் விருதும் திவ்யாவுக்கு வழங்கப்பட்டிருந்தது.  ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக துண்டுப்பிரசுரம் கொடுத்த சேலத்தைச் சேர்ந்த வளர்மதி என்ற கல்லூரி மாணவியை போலீஸார், கடந்த 12-ம் தேதி கைது செய்தனர். இதையடுத்து அவர் மீது குண்டாஸ் சட்டமும் போடப்பட்டது.

இந்நிலையில், 8 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்துக்காக, தற்போது திவ்யபாரதி கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரையும், ஆகஸ்ட் 8-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, ஜாமீன் கேட்டு திவ்யா மனுத்தாக்கல் செய்தார். இதையடுத்து, அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close