வெளியிடப்பட்ட நேரம்: 13:28 (25/07/2017)

கடைசி தொடர்பு:13:51 (25/07/2017)

கைது நடவடிக்கை! என்ன சொல்கிறார் திவ்யபாரதி?

மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி,  ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகப் போராடிய வளர்மதி, ஓ.என்.ஜி.சி-க்கு எதிராக கருத்துக் கூறிய குபேரன் வரிசையில் கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி கைது செய்யப்பட்டுள்ளார். 

திவ்யபாரதி

2009-ம் ஆண்டு போராட்டம் நடத்தியதற்காக தொடரப்பட்ட வழக்கில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்னைகளுக்காக குரல் கொடுப்பவர்களை, ஒடுக்கும் நோக்கில் காவல்துறை மூலம் ஏவி அவர்களை தொடர்ந்து கைது செய்து வருகிறது தமிழக அரசு.

இந்நிலையில், மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட திவ்யபாரதி அங்கு செய்தியாளர்களிடம், "தலித் மாணவர் விடுதியில் பாம்பு கடித்து, மன்னர் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்ததைக் கண்டித்து, 2009-ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டேன். உயிரிழந்த மாணவர் சுரேஷ் குடும்பத்திற்கு உரிய நஷ்ட ஈடு வழங்கக்கோரி போராட்டம் நடத்தினேன். சமூக செயற்பாட்டாளர்களுக்கு இதுபோன்ற நடவடிக்கைகள் இயல்புதான். சமூக செயற்பாட்டாளர்களை ஒடுக்குவதற்காக போடப்பட்ட வழக்குதான் இது" என்று கூறினார்.