வெளியிடப்பட்ட நேரம்: 14:36 (25/07/2017)

கடைசி தொடர்பு:14:36 (25/07/2017)

நதிகளுக்கு ஆண்கள் பெயர் ஏன் இல்லை? 'இணைப்பு' சிக்கலை சொல்லும் நடிகர்

மத்திய, மாநில அரசுகளிடம் கூப்பாடு போடும் போராட்டம் சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சுந்தரம் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் சின்னத்திரை நடிகர்கள் ஷியாம் சுந்தர், உத்திரகுமார் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்துப் பேசினர்.

ஷியாம்சுந்தர் பேசுகையில், "விவசாயிகளுக்காக முழுமையான தீர்வு நதிகளை இணைக்க வேண்டும். நதிகளுக்கு ஆண்கள் பெயர் வைத்திருந்தால் இணைந்திருக்கும். பெண்கள் பெயர் வைத்ததால்தான் இணைக்க முடியவில்லை. ஆனாலும், நாம் ஒவ்வொருவரும் பாடுபட்டு நதிகளை இணைத்து விவசாயிகளின் கவலையைப் போக்க வேண்டும். நடிகர் சங்கத்தில் உள்ள நாசர் மற்றும் விஷாலிடம் சொல்லி விவசாயிகளுக்குப் பாடுபடுவோம்" என்றார்.

உத்திரகுமார் பேசுகையில், "விவசாயக் கடன்களை நீக்க வேண்டும். தேசிய நதிநீர் இணைக்க வேண்டும்.விவசாயிகளைப் பாதிக்கும் எரிவாயு பதிக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்" என்றார்.