Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டங்களுக்கு ஆதரவாகக் களமிறங்கிய மாணவர்கள்!

நெடுவாசல்,  கதிராமங்கலம் போராட்டங்களுக்கு ஆதரவாக, தமிழகம் முழுவதும் ஆங்காகே மாணவர்கள் வகுப்பைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயிகளுக்காகக் குரல்கொடுத்த மாணவி வளர்மதி, குண்டர் சட்டத்தில் கைது. நெடுவாசல் போராட்டத்துக்கு ஆதரவாக மாணவர்களுக்கு அழைப்பு விடுத்த அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் குபேரன், இதே போராட்டத்துக்காகப் போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இடைநீக்கம். இவற்றை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது போலீஸார் நடத்திய தடியடி உள்ளிட்ட அரசின் அடக்குமுறைகளைக் கண்டித்தும், நெடுவாசலில் மத்திய அரசு கொண்டுவரத் துடிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும், கதிராமங்கலத்தில் மத்திய அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களுக்கு ஆதரவாக, தமிழகம் முழுவதும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு, போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு, புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மாணவர்கள் தொடர்ந்து போராடிய நிலையில், அந்தக் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்களின் போராட்டம் தொடர்ந்துவருகிறது. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி  ஈ.வெ.ரா அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் வகுப்பைப் புறக்கணித்து, கல்லூரியின் நுழைவுவாயில் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்தக் கல்லூரியின் மாணவர் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாவட்டச் செயலாளர் விஜய் மற்றும் மாணவர்கள் பிரித்திவி, கபில் ஆகியோர் முன்னிலை வகித்த இந்த ஆர்ப்பாட்டத்தில், 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழங்கினர்.

மாணவர் போராட்டம்

இதேபோல புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கல்லூரியில் நெடுவாசல், கதிராமங்கலம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து, 2-வது நாளாக 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் வகுப்பைப் புறக்கணித்து, கல்லூரி முன்பு நின்று, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுக்க, நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் போராட்டங்களுக்கு ஆதரவாக மாணவர்கள் களமிறங்க ஆரம்பித்துள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close