Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இஸ்லாமிய தலைவர் கடத்தல் முயற்சி : பரப்பன அக்ரஹாரா சிறையில் சதித் திட்டம்!

கோவை அனைத்து ஜமாத்துகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இனாயத்துல்லாவை கடத்துவதற்கு திட்டமிட்ட மூன்றுபேர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து கோவை நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டனர்.

 

திராவிடர் விடுதலை கழக பொறுப்பாளர் பரூக் கோவையில் கடந்த மார்ச் மாதம் வெட்டிக்கொலை செய்யப்பட்டார் . இந்தக் கொலை வழக்கில் சதாம் உசேன், அகரம் ஜிந்தா, முனாப், அன்சாத், ஜாபார் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். 

பாருக்கை கொலை செய்த  இந்த ஆறு பேரின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக பணம் கேட்டு, அனைத்து ஜமாத்துகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இனாயத்துல்லாவை கடத்துவதற்கு கொலையாளிகளின் நண்பர்கள் திட்டமிட்டார்கள். இந்த சதித்திட்டத்தை முன்பே கண்டறிந்த போலீஸார், இனாயத்துல்லாவை கடத்த முயன்ற 8 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பாரூக் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி போலிசாருக்கு மாற்றப்பட்டது. இனாயத்துல்லா கடத்தல் முயற்சி வழக்கை கோவை உக்கடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களிடம்  போலீஸார் நடத்திய விசாரணையில், இந்தக் கடத்தல் முயற்சியின் பின்னணியில் அல் உம்மா இயக்த்தை சேர்ந்த கிச்சன் புகாரி, அஸ்ரப் அலி,ஜில்பிகர் அலி ஆகியோர் இருப்பது தெரியவந்தது. இவர்கள் மூவரும் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்று மீண்டவர்கள் என்பதும், பெங்களூரு பி.ஜே.பி அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருப்பதும் , சிறையில் இருந்தபடியே இனாயத்துல்லாவை கடத்துவதற்கு சதித்திட்டம் தீட்டிக்கொடுத்ததும் போலீஸாருக்குத் தெரியவந்தது. 

இதனையடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த கிச்சன் புகாரி , அஸ்ரப் அலி, ஜுல்பிகர் அலி ஆகிய மூவருக்கும் முறைப்படி நோட்டீஸ் கொடுத்து இன்று கோவை  5 வது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர் .

பாரூக் கொலையில் ஈடுபட்டவர்கள் கொலை சம்பவத்திற்கு முதல் நாள் சிறைக்குச் சென்று கிச்சன் புகாரியை சந்தித்து இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. எனவே பாரூக் கொலை வழக்கிலும் அல் உம்மா இயக்கத்தின் கிச்சன் புகாரி உள்ளிட்ட மூவரும் சேர்க்கப்பட வாய்ப்பிருப்பதாக சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கெனவே பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறை கைதிகளுக்குப் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதாக தற்போது சர்ச்சைகள் வெடித்து இருக்கும் நிலையில் கோவையில் நடந்த கொலை மற்றும் கடத்தல் சம்பவங்களும் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து நடத்தப்பட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement