‘இந்து சர்க்கார்’ படத்துக்குத் தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு!

ந்து சர்க்கார்’ படத்தின் காட்சிகளை இயக்குநர் மதுர் பந்தர்கர் நீக்க வேண்டும் எனக்கோரிய மனுவை மும்பை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

 இந்து சர்க்கார்

சஞ்சய்காந்தியின் மகள் எனத் தன்னைக் கூறிவரும் பிரியா பால், மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில் தன் தந்தை சஞ்சய் காந்தியின் வாழ்க்கை வரலாறு குறித்த காட்சிகள், இயக்குநர் மதுர் பந்தர்கர் வெளியிட இருக்கும் ‘இந்து சர்க்கார்’ படத்தில் இடம் பெற்றுள்ளது. இது எனது தந்தையின் புகழுக்குக் கலங்கம் விளைவிக்கும் செயல். அதனால் படத்தின் காட்சிகளை எடிட் செய்த பின்னர், வெளியிட அனுமதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

‘இந்து சர்க்கார்’ படம் 1975 முதல் 1977 வரை இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதை மையமாகக்கொண்டு உருவாகியுள்ளதாக இயக்குநர் தெரிவித்திருந்தார். இவ்வழக்கை அவசர வழக்காக எடுத்துக்கொண்ட நீதிபதிகள் இயக்குநர் வாதத்தை ஏற்றுக்கொண்டனர். பிரியா பாலின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏற்கெனவே திட்டமிட்டபடி ஜூலை 28 அன்று ‘இந்து சர்க்கார்’ படம் திரையிடப்பட இருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!