வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (25/07/2017)

கடைசி தொடர்பு:18:20 (25/07/2017)

வலை வீசும் செம்மரக் கடத்தல் புள்ளிகள்!- கடல்வழி கடத்தலில் மீனவர்கள்?

தமிழக இளைஞர்களுக்குக் கூலி வேலை தருவதாகக் கூறி ஆந்திராவில் செம்மரம் வெட்ட அழைத்துச் செல்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன்பேரில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவரை ராமநாதபுரம் போலீஸார் கைது செய்துள்ளனர். 

செம்மரம் கடத்தல்

ஆந்திர மாநிலத்தில் இருந்து 1,400 கிலோ எடை கொண்ட செம்மரக் கட்டைகளை, ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கடத்தப்படுவதாக ராமநாதபுரம் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், பட்டணம் காத்தான் போலீஸார், தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றிக் கொண்டிருந்த ஐஷர் வாகனத்தை சோதனையிட்டனர். அந்த வண்டியில் இருந்து 2 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். இவற்றைக் கடத்தி வந்ததாக ஆந்திர, கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணு கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மீனவர் ஒருவர், " தமிழகக் கடற்கரை வழியாக இலங்கைக்கு செம்மரம் கடத்தலாம் என்ற முயற்சியில் இவ்வாறு ஈடுபடுகின்றனர். இதற்காக சில மீனவர்களையும் பயன்படுத்திக் கொள்கின்றனர். வருமானம் இல்லாமல் வறுமையில் இருக்கும் மக்களை செம்மரம் வெட்ட அழைத்துச் செல்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பு ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பின்பு, செம்மரம் வெட்டச் செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இருப்பினும், வறுமைச் சூழலில் இருப்பவர்களை அடையாளம் கண்டு, அவர்களை மூளைச் சலவை செய்யும் வேலை ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளது" என்றார் வேதனையோடு. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க