வீட்டிலேயே இயற்கையான ஷாம்பு தயாரிக்கலாம்!

கூந்தல் பராமரிப்பு என்பது பெண்களுக்கு எப்போதுமே இருந்து வரும் பிரச்னைதான். என்னதான் பார்த்துப் பார்த்து பாதுகாத்தாலும் முடி உதிர்வு, இளநரை என்பதை எல்லாம் தற்போதைய பெண்களால் தவிர்க்க முடிவதில்லை. ஆனால் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்த பெண்கள் அழகான கருமையான நீளமான கூந்தலைக் கொண்டிருந்தார்கள். இதன் ரகசியம் என்னவென்றால் அப்போது செயற்கையான ஷாம்பு, கண்டிஷனர், ஆயில் எதுவுமே இல்லை என்பதுதான். சரி இப்போது அதற்கு என்ன என்கிறீர்களா? இன்றும் கூட உங்களால் உங்கள் வீட்டிலேயே இயற்கையான ஷாம்புவை உருவாக்கி அழகான கூந்தலைப் பெற முடியும். அதைப்பற்றி பார்ப்போம். 

இயற்கையான ஷாம்பு

எந்தவொரு ரசாயன பொருளும் இல்லாமல் 100% இயற்கை பொருள்களைக் கலந்து வீட்டில் உருவாகும் இந்த ஷாம்புவை குளிக்கப் பயன்படுத்தினால் கூந்தல் வளர்வதோடு உதிர்வு நிற்கிறது. இந்த ஷாம்பு கூந்தலுக்குத் தேவையான சத்தினை அளித்து அதன் வேர்களுக்கு உறுதியைத் தருகிறது. இதை தயாரிக்க உதவும் பொருள்கள் ரொம்பவும் எளிதானது. அதாவது 

வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன் 
உலர்ந்த நெல்லிக்காய் - 1/4 கப் 
உலர்ந்த சீயக்காய் - 1/4 கப் 
பூந்தி கொட்டை - 5 
தண்ணீர் - 1/2 லிட்டர்

மேலே சொன்ன எல்லா பொருள்களையும் கலந்து இதனுடன் தண்ணீர் ஊற்றி இரவு முழுக்க ஊற விடுங்கள். மூடி வைத்து விட்டு மறுநாள்  காலையில் எழுந்து இந்தக் கரைசலை மிதமான தீயில் வைத்து கொதிக்க வையுங்கள். சுமார் இரண்டு மணி நேரம் கொதித்த பின்னர், கருப்பு மற்றும் சோப்புத் தன்மை பெற்ற கரைசலாக மாறும். அப்போது தீயை நிறுத்தி வடிகட்டி ஒரு கண்ணாடி ஜாரில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது உங்களுக்கான இயற்கையான ஷாம்பு கிடைத்து விட்டது. இதை எப்போதும் பயன்படுத்தி இயற்கையான, குளிர்ந்த, வாசனையான கூந்தலைப் பெறுங்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!