மக்களின் மொபைல் போன்களைக் கண்காணிக்கவிருக்கும் சீனா!

தணிக்கை என்ற பெயரில் கூகுள், ஃபேஸ்புக், விக்கிப்பீடியா போன்ற தளங்களுக்கு சீனாவில் தடை இருக்கிறது. அந்நாட்டைப் பொறுத்தவரை... மக்கள் எதைச் செய்ய வேண்டுமென்பதை அந்நாட்டு அரசுதான் தீர்மானிக்கிறது.

மக்களின் மொபைல் போன்களைக் கண்காணிக்கவிருக்கும் சீனா!

சீனாவில் உள்ள ஜிஞ்சியாங் (Xinjiang) மாகாணத்தில் கணிசமான அளவுக்கு முஸ்லீம்கள் இருக்கின்றனர். கண்காணிப்பு என்ற பெயரில் இந்த மாகாணத்தில் காவல்துறை சோதனைகள் அவ்வப்போது நடந்துவருகின்றன. தற்போது அந்நாட்டு அரசு இன்னும் ஒருபடி மேலே போய், அம்மாகாண மக்கள் பயன்படுத்தும் மொபைல் போன்களையும் கண்காணிக்கத் திட்டமிட்டிருக்கிறது. பாதுகாப்பு முன்னேற்பாடு நடவடிக்கையாக இது சொல்லப்படுகிறது.

இம்மாகாண காவல்துறை உதவியுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் CleanWebGuard அப்ளிகேஷன், மொபைல் போன்களில் உள்ள தகவல்களைக் கண்காணிக்கக்கூடியது. வாட்ஸ்அப் போல சீனாவில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் 'வீ சாட் (We Chat)' அப்ளிகேஷன், வெய்போ என்ற சோஷியல் மீடியா போன்றவற்றின் சாட்களையும் இந்த ஆப் கண்காணிக்கும். தீவிரவாதத்துக்கு ஆதரவான மற்றும் அரசுக்கெதிரான தகவல்களை இந்த அப்ளிகேஷன் டெலீட் செய்துவிடும். அம்மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரும் இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்யும்படி அரசு சார்பாக அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!