வெளியிடப்பட்ட நேரம்: 20:23 (25/07/2017)

கடைசி தொடர்பு:20:23 (25/07/2017)

முப்பதாயிரம் சம்பளம்... ஆசை காட்டிய ஏஜென்ட்டைக் காணவில்லை... மதுரையில் பரபரப்பு!

வெளிநாடுகளுக்கு ஆள் அனுப்பும் மதுரையைச் சேர்ந்த தனியார் ஏஜென்ட் ஒருவர் மலேசியாவில் தமிழர்களைக் கொத்தடிமைகளாக விற்று பணம் சம்பாதித்துள்ளார்.

அவர் மீது நடவடிக்கை எடுங்கள் என மதுரை மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுக்க, தன் கணவருடன் வந்திருந்த சின்னம்மாவிடம் பேசினோம், "நாங்கள் பேரையூர் சின்னக்கட்டளைப் பகுதியைச் சேர்ந்தவர்கள். என் கணவர் முத்து ஜோதியும் பக்கத்து ஊர்க்காரர் பாண்டியும் கடந்த ஆண்டு மலேசியா சென்றனர். அதற்காக, ராவுத்தர் என்ற வெளி நாடுகளுக்கு ஆள் அனுப்பும் ஏஜென்ட் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் தருவதாகக் கூறி என் கணவர் மற்றும் பல்வேறு நபர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பினார். மலேசியா சென்ற அவர்களுக்கு வேலை கொடுக்காமல் கொத்தடிமைகள் போல நடத்தி சித்தரவதை செய்துள்ளனர். இது தொடர்பாக பல முறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தப் பயனும் இல்லை. நேற்றுதான் என் கணவரையும் பாண்டி என்பவரையும்  அனுப்பி வைத்தனர். என் கணவருக்கு அதிக சம்பளம் வழங்குவதாக ஏமாற்றி, எங்கள் பணத்தைதான் மோசடி செய்துள்ளனர். எனவே ஏமாற்றிய ஏஜென்ட்டை கண்டுபிடித்து, அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களைப்போல் கொத்தடிமைகளாக இருக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை வேண்டும். மேலும் எங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றும் வகையில் உதவி செய்ய வேண்டும்’’ என்றார் .