வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (25/07/2017)

கடைசி தொடர்பு:08:37 (26/07/2017)

வலுக்கட்டாயமாக வந்தே மாதரம் பாட வைப்பது நாட்டுப்பற்றா?


ந்தேமாதரம் பாடல் பாடுவதை கட்டாயம் ஆக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சசி தரூர் வந்தே மாதரம் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி சசிதரூர்,"உச்சநீதிமன்றம் ஏற்கெனவே, தியேட்டர்களில் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இப்போது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இப்படி ஒவ்வொன்றாக அடுத்தடுத்து கட்டாயப்படுத்துவது நல்லதல்ல. நாடாளுமன்றத்தில் நாம் இதுபோல் செய்வதில்லை. நாட்டுப் பற்று என்பது ஒவ்வொருவரின் இதயத்தில் இருந்து வர வேண்டும். ஆனால், வலுக்கட்டாயப்படுத்தி தேசிய கீதத்தை பாட வைப்பதால், மக்களுக்கு நாட்டுப் பற்று வந்துவிடாது. வந்தே மாதரம் பாட வேண்டும் என்று விரும்புகின்றவர்களுக்கு அதற்கான வாய்ப்புத் தரப்பட வேண்டும். அதே நேரத்தில், பாட விருப்பம் இல்லாதவர்களுக்கும் அதற்கான சுதந்திரம் தரப்பட வேண்டும்" என்றார்.
இதே விவகாரத்தில் கருத்துத் தெரிவித்துள்ள இன்னொரு காங்கிரஸ் எம்.பி ரஞ்சித் ராஜன், "தேசிய கீதம் பாடுவதை வைத்து ஒருவரின் நாட்டுப் பற்றை எப்படித் தீர்மானிக்க முடியும்? தேசிய கீதத்தை பாடுவதன் மூலம்தான் நாட்டுப்பற்றை நிரூபிக்க முடியும் என்று பி.ஜே.பி அரசு ஏன் கட்டாயப்படுத்துகிறது" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க