வெளியிடப்பட்ட நேரம்: 00:08 (26/07/2017)

கடைசி தொடர்பு:07:46 (26/07/2017)

இலங்கையை அதிர வைத்த நீதிபதியின் அழுகை

லங்கையில் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் நீதிபதியாக இருப்பவர் மாணிக்கவாசகர இளஞ்செழியன். இலங்கையில் பல முக்கிய வழக்குகளில் இவர் தீர்ப்பளித்துள்ளார். மாங்குளத்தைச்  சேர்ந்த சிவலோகநாதன், வித்யா என்ற மாணவியை சிலர் பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்தனர். மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ள வழக்குகளில்  மிக நேர்மையாகத் தீர்ப்புகளை வழங்கி ​​​​​​குற்றவாளிகளை தண்டித்தவர் இளஞ்செழியன். 

கதறி அழும் நீதிபதி நெடுஞ்செழியன்

கடந்த வாரம்  துணை போலீஸ் சூப்பிரண்டு ஒருவர் நீதிபதி இளஞ்செழியனால் சிறையில் அடைக்கப்பட்டார். இலங்கையில் நன்மதிப்பு பெற்ற நீதிபதியான இவரைக் கொலை செய்ய அடையாளம் தெரியாத சிலர் முயன்றனர். நல்லூரில் சிக்னலுக்காக இளஞ்செழியன் சென்ற வாகனம் காத்திருந்தபோது, மர்ம நபர்கள் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். நீதிபதி உயிர் தப்பி விட பாதுகாவலர் சரத் பிரேமசந்திரா பலியானார். 

  

 

துப்பாக்கி குண்டுக்கு தன் பாதுகாவலர் பலியாகி விட, நீதிபதி கடும் வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தார். அவரின் வீட்டுக்குச் சென்ற நீதிபதி இளஞ்செழியன், பாதுகாவலர் சரத் பிரேமச்சந்திராவின் மனைவி காலில் விழுந்து கதறி அழுதது காண்போரை உருக வைத்தது. இந்தச் சம்பவம் இலங்கையில் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க