வெளியிடப்பட்ட நேரம்: 12:41 (26/07/2017)

கடைசி தொடர்பு:13:05 (26/07/2017)

அருண் விஜய்யின் 'தடம்' படத்தில் மூன்று ஹீரோயின்கள்!

'முன்தினம் பார்த்தேனே', 'தடையறத் தாக்க', 'மீகாமன்' ஆகிய படங்களை இயக்கியவர், மகிழ்திருமேனி. இவர், அடுத்து இயக்கிக் கொண்டிருக்கும் 'தடம்' படத்தில் அருண் விஜய் நடிக்கிறார். 

தடம்

இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராக உருவாகிக்கொண்டிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, சென்ற மாதமே தொடங்கிவிட்டது. அருண்ராஜ் என்ற அறிமுக இசையமைப்பாளர் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். அருண் விஜய்யின் 24-வது படமான இதில், முதலில் இரண்டு நாயகிகள் நடிக்க இருக்கிறார்கள் எனச் சொல்லப்பட்டது. இப்போது, மூன்று நாயகிகள் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். தெலுங்கில் ஜெகபதி பாபு நடித்த 'படேல் எஸ்.ஐ.ஆர்' படத்தில் நடித்த தன்யா, 'சைவம்', 'பசங்க 2' ஆகிய படங்களில் நடித்த வித்யா பிரதீப் மற்றும் அறிமுக நாயகி ஸ்ம்ரித்தி ஆகியோர் 'தடம்' படத்தில் இணைந்துள்ளார்கள். படத்தின் முதல் ஷெட்யூலை சில தினங்களுக்கு முன்பு முடித்திருக்கிறது படக்குழு. இரண்டாவது ஷெட்யூலை ஆகஸ்ட் 4-ம் தேதி தொடங்கவிருக்கிறார்கள். நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் தொடக்கத்தில் படத்தை வெளியிட முடிவுசெய்திருக்கிறார்கள்.