’முடிவுக்கு வரும் ஃப்ளாஷ்’... அடோப் நிறுவனத்தின் திடீர் அறிவிப்பு!

இணையத்தில் வீடியோ மற்றும் கேம்ஸ் வளர்ச்சி பெற்றதற்கு, அடோப் நிறுவனத்தின் ஃப்ளாஷ் ப்ளேயருக்கு (Adobe Flash Player) முக்கியப்பங்கு இருக்கிறது. யூடியூப் உள்ளிட்ட பல தளங்களில் வீடியோக்கள் இன்றளவும் இதன் மூலமாகத்தான் ப்ளே ஆகின்றன. அடோப் நிறுவனம் ஃப்ளாஷ் ப்ளேயரை 1996-ம் ஆண்டில் வெளியிட்டது. சுமார் 20 வருட வரலாறு கொண்ட ஃப்ளாஷ் ப்ளேயரை விரைவில் நிறுத்தப்போவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடோப் ஃப்ளாஷ் ப்ளேயர்

ஃப்ளாஷ் ப்ளேயரின் பயன்பாடு நாளுக்குநாள் குறைந்துகொண்டே வருவதால் அந்நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 80 சதவிகிதப்பேர் இதைப் பயன்படுத்தினர். இந்த எண்ணிக்கை தற்போது 17 சதவிகிதமாகச் சுருங்கியுள்ளது. கணினியில் பிரவுஸ் செய்பவர்கள் மட்டுமே இதை அதிகம் பயன்படுத்துகின்றனர். தற்போது மொபைல் போன்கள் வழியாக அதிகப்பேர் இணையத்தைப் பயன்படுத்துவதாலும், ஹெச்.டி.எம்.எல் 5 (HTML 5) போன்றவை ஃப்ளாஷ் ப்ளேயருக்கு மாற்றாக அதிக அளவில் பயன்படுத்தப்படுவதாலும், இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.

2020-ம் ஆண்டோடு இந்த ப்ளேயருக்கான அப்டேட்டையும், இதைப் பயன்படுத்துவதற்கான உரிமத்தையும் நிறுத்துகிறது அடோப் நிறுவனம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!