வெளியிடப்பட்ட நேரம்: 13:11 (26/07/2017)

கடைசி தொடர்பு:19:43 (26/07/2017)

'நீ யாரு'னு ஓவியாவைக் கேட்கிறீங்களே காயத்ரி.. நாங்க கேட்கிறோம், 'நீ யாரு' - நடிகை மிஷா கோஷல்!

'பிக் பாஸ்' நிகழ்ச்சிப் பற்றி ஃபேஸ்புக், ட்விட்டர் என பலரும் தன் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள். எல்லாரையும்விட ஒருபடி மேலே போய் தங்கள் கருத்துகளை தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் பிரபலங்கள். அந்த வரிசையில் ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சியைப் பார்த்து தனது கருத்துகளையும், விமர்சனங்களையும் ட்விட்டரில் பதிந்து வருகிறார் 'லென்ஸ்' பட நாயகியும், மாடலுமான மிஷா கோஷல். 

மிஷா கோஷல்

எல்லோரையும் போல, 'ஓவியா எனக்கு நல்லதொரு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். அவரது கேரக்டரை இப்போது ஃபாலோ செய்து கொண்டிருக்கிறேன்.', 'காயத்ரி ஏன் இப்படி ஆட்டிடியூட் காண்பிக்கிறீங்க.. 'நீ யாரு நீ யாரு'கேட்கிறீங்க. நாங்க கேட்கிறோம், 'நீ யாரு', 'இந்த நாளில் மிகப்பெரிய காமெடியே ஜூலி சொன்ன, 'பொய் சொல்லக்கூடாது' என்பதைத்தான். என்னால் சிரிப்பை அடக்க முடியல', 'அதென்ன வேற மாதிரி கோபம் ஜூலி? உன்னைப் பாத்தா தமிழ்நாட்டுக்கே கோபம் வருது. தயவு செய்து கோபத்தை அடக்கு' எனவும் தன் ட்விட்டரில் தினமும் பதிந்து வருகிறார் மிஷா கோஷல்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க