Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அதிகரிக்கும் வெயிலின் கொடுமை: வெப்பச் சலனத்தால் மழை பெய்யலாம்!

தமிழகத்தின் கடலோரம் மற்றும் உள்மாவட்டங்களில் வெயில் அதிகரித்தே காணப்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வெயில்


'ஆடிமாசக் காத்துல அம்மியே பறக்கும்' என்பது கிராமங்களில் சொல்லப்படும் பழமொழி. ஆனால், 'அடிக்கும் அனல் காற்றில் சாலைகளில் வெப்ப அனல் பறந்துகொண்டிருக்கிறது. கடந்த சில நாள்களாக தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாகி வருகிறது. குறிப்பாக சென்னையில் வெயில் கொளுத்தியெடுக்கிறது. கோடைக்காலத்தில் நிலவி வருவதுபோல, வெயில் கொளுத்துவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். 100 ஃபாரன்ஹீட்டுக்கும் மேல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

மேற்கிலிருந்து நிலக்காற்று வீசுவதால், தமிழகத்தில் தற்போது வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. கிழக்கில் இருந்து கடற்காற்று வீசும்போது, வெப்பத்தின் தாக்கம் குறையலாம் எனக் கூறப்படுகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் ஏழு முதல் ஒன்பது டிகிரி பாரன்ஹீட் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வெப்பம் அதிகரிக்கும் அதே வேளையில் வெப்பச்சலனத்தால் ஓரிரு இடங்களில் மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close