Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் இந்தியா வென்ற முதல் பதக்கம் ஏலம். ஏன்?

லிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டுமென்பதுதான் ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் கனவாக இருக்கும். இந்தியாவுக்கோ அது பெருங்கனவு. ரியோ ஒலிம்பிக்கில் கூட ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கத்துடன் இந்தியா திருப்திப்பட வேண்டியதாகி விட்டது. சர்வதேச அரங்கில் இந்திய விளையாட்டுத்துறையின் நிலை இதுதான். தகுதியும் திறமையும் வாய்ந்த வீரர்களைப் புறந்தள்ளுவது வாடிக்கையாகி விட்டது. அந்தளவு ஊழலும் அரசியலும் விளையாட்டுத்துறையை சீரழித்துள்ளது.

ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் பதக்கம் வென்ற இந்தியர்

பூமிப்பந்தில் புள்ளி அளவு உள்ள நாடுகள் கூட ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று பதக்கப்பட்டியலில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்க, இந்தியா பதக்கப் பட்டியலில் கடைசி இடத்துக்கும் சற்று மேலே இருப்பதைத்தான் ஆண்டாண்டு காலமாக பார்த்து வருகிறோம். நிலைமை இப்படியிருக்க, ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற முதல் தனிநபர் பதக்கம், இப்போது ஏலத்துக்கு வந்துள்ளது. கிட்டத்தட்ட, இது இந்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு இழுக்கு.

1948-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி முதல் தங்கப்பதக்கத்தை வென்றது. தொடர்ந்து, 1952-ம் ஆண்டு ஹெல்சிங்கி ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தனிநபர் பிரிவில் முதல் பதக்கத்தைக் கைப்பற்றியது. மல்யுத்த வீரரான கஸபா யாதவ் வெண்கலம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார்.  அதற்கு முன்பு 1900-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் பிரிட்டனைச் சேர்ந்த நார்மன் பிரிச்சர்ட் தடகளத்தில் இந்தியாவுக்காக இரு வெள்ளிப் பதக்கங்களை வென்றிருக்கிறார். எனினும், நார்மன் இந்தியர் அல்ல என்பதால், இந்திய விளையாட்டுத்துறை வரலாற்றில் கஸபா ஜாதவின் சாதனை பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டது. 

மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து அசாத்திய சாதனை நிகழ்த்திய கஸபா யாதவ்தான் பத்ம விருது பெறாத, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீரர். இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் போடியம் ஏறிய முதல் வீரருக்கு இந்தியா கொடுத்த மரியாதை இது. அரசுகளிடம் இருந்து எதையும் எதிர்பார்க்காத அந்த மனிதர் 1984-ம் ஆண்டு 58 வது வயதில் மரணம் அடைந்தார். உயிருடன் இருந்த வரை,  இந்திய அரசு அவருக்கு எந்த விருதும் அளித்து கௌரவிக்கவில்லை. 

கஸபா யாதவின் குடும்பத்துக்கு அவரின் பெயரில் மல்யுத்தப் பயிற்சி மையம் உருவாக்க வேண்டுமென்பது ஆசை. மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை. 2009ம் ஆண்டு கஸபா ஜாதவின் பெயரில், மல்யுத்த மையம் அமைக்கப்படும் என அப்போதைய மகாராஷ்டிர  மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் திலீப் தேஷ்முக் அறிவித்தார். 2013ம் ஆண்டு அதற்காக 1.58 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது. இதுவரை மல்யுத்த பயிற்சி மையம் எங்கே அமைகிறது... எப்படி அமையப்போகிறது என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இனிமேல் அரசுகளை நம்பி பலனில்லை என்ற முடிவுக்கு வந்த, அவரின் குடும்பத்தினரே ஜாதவ் பெயரில் மல்யுத்த மையம் தொடங்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக நிதி திரட்ட  அவர்  வென்ற ஒலிம்பிக் பதக்கத்தை ஏலம் விடவும் முடிவு செய்திருக்கின்றனர். கஸபா யாதவின் மகன் ரஞ்சித் கூறுகையில், ''என் தந்தை 1984-ம் ஆண்டு வரை உயிருடன் இருந்தார். அவருக்கு பத்ம விருது வழங்க வேண்டும் என இந்த அரசுக்குத் தோன்றவில்லை. தந்தை இறந்த 16 ஆண்டுகள் கழித்துதான் அர்ஜுனா விருது கூட வழங்கினர். உயிருடன் இருந்த  போது கண்ணை மூடிக் கொண்டு இருந்த அரசு இறந்த பின்னரே, அர்ஜுனா விருது வழங்கியது. தந்தை வென்ற ஒலிம்பிக் பதக்கத்தை ஏலம் விடுவது விலி மிகுந்த ஒன்றுதான். அதை விட, இந்த நாடு அவரைப் புறக்கணித்தது வேதனை மிகுந்தது. இந்த அரசுக்குப் புத்தி புகட்ட எனக்கு இதை விட வேறு வழி தெரியவில்லை'' என்கிறார் ஆதங்கத்துடன்!

நிஜ ஹீரோக்களை இந்த நாடு ஒரு போதும் போற்றியதில்லை!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close