Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மும்பையில் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி!

tennis

 


ர்வதேச ஆண்கள் டென்னிஸ் போட்டி சென்னை ஓப்பன் டென்னிஸ் போட்டியாக கடந்த 21 ஆண்டுகளாக நடத்தப்பட்டது. இப்போட்டி தற்பொழுது மராட்டிய மாநிலத்தில் உள்ள புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் இப்போட்டி புனேயில் உள்ள மராட்டிய ஓப்பன் டென்னிஸ் போட்டி என்ற பெயரில் நடக்கும் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், பெண்களுக்கான சர்வதேச டென்னிஸ் போட்டியையும் மும்பையில் நடத்த மராட்டிய மாநில டென்னிஸ் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டில் புனேயில் சர்வதேசப் பெண்கள் டென்னிஸ் போட்டி (ராயல் இந்தியன் ஓப்பன்) நடந்தது. 

அதன்பின் அப்போட்டி அங்கு நடக்கவில்லை. தற்பொழுது 5 ஆண்டுகளுக்குப் பின்னர் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி மும்பையில் வரும் நவம்பர் மாதம் நடத்தப்பட உள்ளது. மும்பை ஓப்பன் டென்னிஸ் போட்டி என்ற பெயரில் நடக்க இருக்கும் இப்போட்டியில் உலக தரவரிசையில் 50 இடங்களுக்குள் இருக்கும் முன்னணி வீராங்கனைகள் 4 பேருக்கு நேரடியாக பிரதான சுற்றில் விளையாட ‘வைல்டு கார்டு’ வழங்கப்படும்.

இதன் மூலம் இந்திய வீராங்கனைகள் நல்ல அனுபவத்தைப் பெறுவதுடன். தங்களது தர வரிசைப் புள்ளிகளை உயர்த்தி அடுத்த கட்டத்துக்கு முன்னேற வாய்ப்பாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை என்று மராட்டிய மாநில டென்னிஸ் சங்க பொதுச் செயலாளர் சுந்தர் அய்யர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close