Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இம்சை அரசன் 23-ம் புலிகேசி-2' விரைவில் ஷூட்டிங்..!

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி

பிரமாண்ட இயக்குநரும் தயாரிப்பாளருமான ஷங்கர், தன்னுடைய 'எஸ்' பிக்சர்ஸ் சார்பாக 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படத்தின் முதல் பாகத்தைத்  தயாரித்தார். சிம்புதேவன் டைரக்‌ஷனில் உருவான இந்தப் படத்தில், வடிவேலு இரட்டை வேடங்களில் கதாநாயகனாக நடிக்க,  அவரது நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. வசூல்ரீதியாக படம் சக்கைபோடு போட்டது. அதன்பின், ஹீரோவாக நடிப்பதைத் தவிர்த்து, தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களோடு காமெடி வேடத்தில்  நடித்துவந்தார் வடிவேலு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்' திரைப்படத்தில் நாயகனாக நடித்தார். அதன்பிறகு, 'எலி' படத்தில் ஹீரோவாக நடித்தார். விஜய்யுடன் அட்லி இயக்கத்தில் 'மெர்சல்' படத்தில் காமெடி வேடத்தில் நடித்துவரும் வடிவேலு, இன்னொரு பக்கம் சிம்புதேவன் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடித்துவருகிறார். இதற்கென்று லம்ப்பாக கால்ஷீட் தேதிகளை அள்ளிக்கொடுத்திருக்கிறார் வடிவேலு.

கடந்த 24-ம் தேதி, 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி-2' படத்துக்கான  போட்டோ செஷன் நடந்தது. இப்போது, சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈ.வி.பி ஸ்டூடியோவில் 'காலா' படத்தின் படப்பிடிப்பு நடந்துவருகிறது. அதே ஸ்டூடியோவின் இன்னொரு பகுதியில், 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி-2' படத்துக்காக செட் போடப்பட்டுவருகிறது,  ஹைதராபாத் ராமோஜிராவ் ஸ்டூடியோவில் அரசர்கால செட்டிங் போன்றவற்றை 'ஐ' பட ஆர்ட் டைரக்டர் முத்துராஜ் பிரமாண்டமாக அமைத்திருக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை, முதல்பிரின்ட் அடிப்படையில் 'எஸ்' பிக்சர்ஸ் சார்பில் ஷங்கர்  தயாரித்துத் தருகிறார். சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகும் 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி-2' படத்தின் படப்பிடிப்பு, ஆகஸ்ட் 3-ம்தேதி முதல் தொடங்குகிறது. முதல் பாகத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக மோனிகா நடித்தார். இரண்டாம் பாகத்தில் நடிக்கும் ஹீரோயின் பெயரை இன்னும் அறிவிக்காமல் ரகசியமாகப் பாதுகாத்துவருகிறார் சிம்புதேவன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close