Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கிராமங்களைக் குறிவைக்கும் சிலைகடத்தல் கும்பல்! அடுத்தடுத்த கைதால் அதிரும் அரியலூர்

                          

தமிழகத்தில் சிலை கடத்தல் விவகாரம் பூதாகரமாக வெடித்துக்கொண்டிருக்கும் நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக பொன்.மாணிக்கவேல் பணியாற்றியபோது கோயில்களிலிருந்து திருடுபோன பல சிலைகள், வெளிநாட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த பல சிலைகள் மீட்டன. இவரின் செயல்பாடுகளைக் கண்ட நீதிமன்றமும் இந்த வழக்கை முழுமையாக விசாரிக்க அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் அரியலூரில் திருடுபோன மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்டது மட்டுமல்லாமல் 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது போலீஸ்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நாகல்குழி கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் கடந்த பிப்ரவரி மாதம் ஒன்றரை அடி உயரமுள்ள ஐம்பொன் சிலை கொள்ளையடிக்கப்பட்டது. அதேபோன்று சிறுகடம்பூர் வீரணார் கோயிலில் இருந்த பச்சையம்மன் சிலையும், ஓட்டகோவில் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் இருந்த அம்மன் சிலையும் திருடு போயின. இந்த சிலை திருட்டு சம்பவம் குறித்து இரும்புலிக்குறிச்சி மற்றும் அரியலூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று கும்பகோணத்தில் காரில் வந்த சிலரை  போலீஸார் காரை மடக்கி விசாரணை செய்தபோது காரில் மூன்று சிலைகள் இருந்ததை கண்டுபிடித்தனர். காரில் இருந்த 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது, அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அவர்கள்,  நாகல்குழி, சிறுகடம்பூர் மற்றும் ஓட்டகோவில் கிராமங்களில் உள்ள கோயில்களின் சிலைகளைத் திருடியதை ஒப்புகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து கும்பகோணம் போலீஸார் 3 ஐம்பொன் சிலைகள் மற்றும் சிலை திருட்டில் தொடர்புடைய 5 பேரையும் அரியலூர் மாவட்ட போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவர்களை சம்பந்தபட்ட கோயில் நிர்வாகிகளை அழைத்து அடையாளம் கண்டனர் போலீஸார். இதனைத்தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக உடையார்பாளையத்தை சேர்ந்த செல்வம், மூர்த்தி உள்ளிட்ட 7 பேரையும் கைது செய்த அரியலூர் போலீஸார், அவர்களை அரியலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி மகாலெட்சுமி அவர்களை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். போலீஸார் அவர்களை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close