வெளியிடப்பட்ட நேரம்: 16:51 (26/07/2017)

கடைசி தொடர்பு:17:12 (26/07/2017)

அபராதம் இனி இப்படிதான் வசூல்! சென்னை டிராஃபிக் போலீஸ் புதுமுடிவு

சென்னைப் போக்குவரத்து போலீஸ் இனி அபராதம் வசூலிக்க ஸ்வைப்பிங் இயந்திரத்தைப் பயன்படுத்த உள்ளனர்.

traffic police

தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் வாகன ஓட்டிகளுக்கு இருக்கும் கெடுபிடிகள் அதிகம். சென்னையைப் பொறுத்தவரை இரு சக்கர வாகன ஓட்டிகள் ஒழுங்காக ஹெல்மட் போட்டிருக்கின்றனரா, கார் ஓட்டிகள் சீட் பெல்ட் போட்டிருக்கின்றனரா மற்றும் இதரப் போக்குவரத்து விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுகின்றனவா என்று கண்காணிக்க கிட்டத்தட்ட ஒவ்வொரு சிக்னலிலும் காவல் துறையினர் பணியில் இருக்கின்றனர்.

ஒருவேளை விதிமுறைகள் மீறப்பட்டால், குறிப்பிட்ட அபராதத் தொகையை வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவலரிடம் செலுத்த வேண்டியிருக்கும். முன்னர் பணம் மூலமாக இந்த அபராதத் தொகை செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது ஸ்வைப்பிங் இயந்திரம் மூலம் பெறப்பட உள்ளது. இதற்காக முதற்கட்டமாக எஸ்.பி.ஐ சார்பில் 100 ஸ்வைப்பிங் இயந்திரங்கள் சென்னை மாநகர போக்குவரத்து போலீஸுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், இனி வரும் காலங்களில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளிலிருந்து நேரடியாக அபராதத் தொகையைப் பெற முடியும்.