வெளியிடப்பட்ட நேரம்: 17:08 (26/07/2017)

கடைசி தொடர்பு:17:08 (26/07/2017)

குமரியில் சஜாக் ஆப்ரேஷன்! பதற்றத்தில் 44 மீனவ கிராமங்கள்

இந்தியாவின் தென் முனையாக கன்னியாகுமரி மாவட்டம் இருக்கிறது. கடல் சார்ந்த சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கவும், ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்கவும் சஜாக் ஆப்ரேஷன் கடலோரப் பாதுகாப்புப் படையால் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று கன்னியாகுமரியில் சஜாக் ஆப்ரேஷன் நடந்தது.

சின்னமுட்டம் துறைமுகத்திலிருந்து கடலோரப் பாதுகாப்புக் குழு போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் போலீஸார் அதி நவீன ரோந்து படகில் சஜாக் ஆப்ரேஷனை நடத்தினார்கள். அவர்கள் கன்னியாகுமரி கடல் பகுதி மற்றும் கூடங்குளம் வரையிலான பகுதி வரை கண்காணிப்பில் ஈடுப்பட்டனர்.

நாளை ராமேஸ்வரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவு மண்டபத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். எனவே, கடல் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு வளையம் உருவாகி உள்ளது. கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களிடமும் அடையாள அட்டை சோதனையை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதுபோல் கடலோர சோதனைச் சாவடிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மணலில் ஓடும் அதி நவீன ரோந்து வாகனங்கள் மூலமும் கடலோரப் பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதனால் குமரி மாவட்டத்தின்
44 மீனவ கிராமங்களும் பதற்றமாக உள்ளன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க