Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஸ்டாலின் வருவதற்காகக் கெத்து காட்டுகிறார்கள்!'' விஸ்வரூபம் எடுக்கும் எடப்பாடி ஏரி பிரச்னை!

 எடப்பாடி பழனிச்சாமி தொகுதியில் உள்ள கச்ராயன் ஏரி

தமிழக முதல்வரின் தொகுதியான எடப்பாடியில் உள்ள கச்சராயன் ஏரி தூர்வாரும் பிரச்னையில், தி.மு.க., அ.தி.மு.க இடையே தற்போது கலவரம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். எந்த நேரத்திலும் கலவரம் வெடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க சார்பில் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், வீரபாண்டி ராஜா, சிவலிங்கம் என மூன்று மாவட்டச் செயலாளர்கள் மற்றும் ஒன்றியச் செயலாளர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் வந்திறங்க, அதேபோல அ.தி.மு.க-வில் இருந்தும் ஒன்றிய, நகர பொறுப்பில் உள்ளவர்கள், கட்சித் தொண்டர்கள் என 300-க்கும் மேற்பட்டவர்கள் குவிந்திருக்கிறார்கள். இதனால், கொங்கணாபுரத்தில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது.

 

அ.தி.மு.க.,வினர்...

தி.மு.க., தொண்டர்...

இதுபற்றி அ.தி.மு.க-வைச் சேர்ந்த மணி, ''நாங்கள், இந்தப் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க-வினர். நாங்கள், யாரும் வெளியூரில் இருந்து வரவில்லை. ஆனால், தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் அனைவரும் வெளியூரில் இருந்து இங்குவந்து அரசியல் செய்துவருகிறார்கள். நாங்கள், எங்கள் ஊரில் உள்ள கச்சராயன் ஏரியைத் தூர் வாருவதற்காகச் சங்ககிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் 4.7.2017 முதல் 31.7.2017 வரை அனுமதி பெற்றிருக்கிறோம். கட்சிப் பணியின் காரணத்தினாலும், முதல்வர் எங்கள் தொகுதிக்கு வந்ததற்கு வரவேற்பு கொடுக்கும் பணியாலும் இந்த ஏரியை எங்களால் தூர்வார முடியாமல், கால தாமதம் ஏற்பட்டுவிட்டது. ஆனால், வெளியூரைச் சேர்ந்த தி.மு.க-வினர் எங்கள் ஏரியைத் தூர்வாருகிறார்கள். அதனால், நாங்களும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோம். இந்த நிலையில், நாளை தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் இந்த ஏரிக்கு வந்து பார்வையிட்டுச் செல்வதோடு கடப்பாரை, மண்வெட்டி போன்றவற்றைக்கொண்டு ஏரியைத் தூர்வாருவதுபோல போஸ் கொடுத்துவிட்டு... முதல்வர் தொதியில் ஏரி தூர்வாரியதாகக் கெத்தைக் காட்டவே இந்தப் பணியை செய்கிறார்கள். அதை நாங்கள் எப்படி அனுமதிப்போம்? உண்மையில், ஏரியைத் தூர்வார வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஏரிகள் இருக்கின்றன. அங்குச் சென்று தூர்வார வேண்டியதுதானே. அரசியலுக்காக முதல்வர் தொகுதிக்குள் புகுந்து போஸ் கொடுத்துவிட்டுச் சென்றால் நாங்கள் ஏற்றுக்கொள்வோமா? நிச்சயம் ஏரியை அவர்கள் தூர்வார விடமாட்டோம். நாங்கள்தான் தூர்வாருவோம்'' என்றார்.

இதுபற்றி தி.மு.க-வைச் சேர்ந்த தமிழ், ''நாங்கள் 28.6.2017-ம் தேதியே ஊர் மக்களைக் கூட்டி ஏரியைத் தூர்வாருவதற்கு அனுமதிக் கடிதம் மாவட்ட கலெக்டர், வட்டாட்சியர் என அனைத்துத் தரப்பினருக்கும் நேரடியாகவும் பதிவு தபால் மூலமாகவும் அனுப்பிவிட்டோம். கடந்த ஒரு மாதமாக இந்தக் கச்சராயன் ஏரியைத் தூர்வாரி சமநிலையை உருவாக்கி இருக்கிறோம்.  

ஏரிக்குள் உள்ள மண்ணைக்கூட வெளியில் கொண்டுசென்று விற்காமல் கரையைப் பலப்படுத்தினோம். 23-ம் தேதி சேலத்துக்கு வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'இந்தத் தொகுதிக்குள் ஸ்டாலினை விடக்கூடாது. எனக்குக் கெட்டபெயர் வந்துவிடும்' எனக் கட்சிக்காரர்களைத் தூண்டிவிட்டுப் பழைய தேதியில் அனுமதிக் கடிதம் பெற்றதாகக் கடிதத்தைப் பெற்று தற்போது எங்களைப் பணி செய்யவிடாமல் தடுக்கிறார்கள். ஏரிக்குள் சாமியானா பந்தல் போட்டு அமர்ந்திருக்கிறார்கள். எங்கள் செயல் தலைவர் தளபதி (ஸ்டாலின்) நாளை சேலம் வரும்போது தூர்வாரிய இந்த ஏரியைப் பார்வையிட்டுச் செல்ல இருக்கிறார். இதை மனதில்வைத்துதான் அ.தி.மு.க-வினர் பிரச்னை செய்கிறார்கள். எங்களை யாரும் தடுக்க முடியாது. எங்களுக்கு மக்களின் ஆதரவு இருக்கிறது'' என்றார்.

இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருவதை ஒட்டி மாவட்ட எஸ்.பி தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டு... வட்டாட்சியர் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில், தி.மு.க-வைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் செல்போன் டவர்மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துவருகிறார். இதனால் கலவரம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close