'விவேகம்' இன்று சென்சார், ஆகஸ்ட் 10 ரிலீஸ்!

தமிழ் சினிமாவில் அஜித் வாயிலாக 'வாலி'யில் அறிமுகம் செய்யப்பட்டவர் எஸ்.ஜெ.சூர்யா, இன்றுவரை 'என் வாழ்நாளில் அஜித்சாரை மறக்கவே மாட்டேன். அவரோட கால்ஷீட்டுக்காக இப்பவும் ஆசையோடு காத்துக்கிட்டு இருக்கேன்' என்று எஸ்.ஜெ.சூர்யா பகிரங்கமாக அறிவித்தும், இதுவரை இயக்குகிற வாய்ப்பை சூர்யவுக்கு ஏனோ அஜித் வழங்கவில்லை. அடுத்து 'தினா' படத்தின் மூலமாக ஏ.ஆர்.முருகதாஸுக்கு இயக்குநராகும் வாய்ப்பை வழங்கினார் அஜித். அவரும் 'அஜித்சார் இயல்பாகவே எமோஷனல் உள்ளவர் அவரை வெச்சு ஆல் இந்தியா லெவல்ல மாஸ்படம் ஒன்றை டைரக்ஷன் செய்யணும்' என்று தனது ஆசையை ஓப்பனாகவே வெளியிட்டார். முருகதாஸுக்கும் அடுத்த படத்தை இயக்கும் சான்ஸை இதுவரை தரவில்லை அஜித். எல்லாவற்றுக்கும் விதிவிலக்காக 'வீரம்' படத்தில் அறிமுகமான டைரக்டர் சிவாவுக்கும் அஜித்துக்கும் அப்படியொரு கெமிஸ்டரி அநியாயத்துக்கு செட்டாகி இருக்கிறது. 'வீரம்' படத்துக்கு பிறகு, அடுத்து 'வேதாளம்' படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார். சென்னையில் மழை, வெள்ளம் மக்களை  அல்லல் கொடுத்த நேரத்தில் ரிலீஸான 'வேதாளம்' எதிர்பார்த்ததைவிட சென்னையில் வசூலித்ததைப் பார்த்து ஆச்சர்யப்பட்டவர்கள் அதிகம்.  

vivegam
 

இயக்குநர் சிவாவுக்கு முதலில் 'வீரம்' அடுத்து 'வேதாளம்' இப்போது 'விவேகம்' என்று மூன்று படங்களில் வரிசையாக நடித்துக் கொடுத்திருக்கிறார் அஜித். நாடுவிட்டு வேறு நாட்டில் ஊடுருவியுள்ள க்ரைம் சப்ஜெக்ட் 'விவேகம்'. இதுவரை அஜித் நடித்துள்ள எந்தப் படத்தின் படப்பிடிப்பும் இத்தனை நாள்கள் வெளிநாட்டில் நடந்ததே இல்லை. அவரும் மாதக்கணக்கில் குடும்பத்தை மறந்து வெளிநாட்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்டதே இல்லை. அஜித்தின் இந்தப் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இன்று (26.7.17) சென்சார் போர்டு அதிகாரிகள் 'விவேகம்' திரைப்படத்தைப் பார்க்கிறார்கள். ஆகஸ்ட் 10-ம்தேதி ரிலீஸ் செய்ய தயாரிப்பு தரப்பு திடமிட்டு இருந்தாலும், சட்டப்படி சென்சார் சர்டிபிகேட் வாங்கிய பிறகே, முறைப்படி அறிவிக்க வேண்டும் என்பது சட்டவிதி. ஆகஸ்ட் 10-ம்தேதிக்குப் பிறகு, ஞாயிறு, கிருஷ்ண ஜெயந்தி, சுதந்திர தினம் என்று தொடர்ச்சியாக வருவதால் ஆறே நாள்களில் வசூலை வாரிக்குவிக்க தயாராகி வருகின்றனர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!