மதுரை சிந்து கிரானைட் நிறுவனத்துக்குச் சொந்தமான 106 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம்!

மதுரையைச் சேர்ந்த சிந்து கிரானைட் நிறுவனத்துக்குச் சொந்தமான 106 கோடி ரூபாய் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.


கிரானைட் வெட்டி எடுத்ததில் தமிழக அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அறிக்கை பரபரப்பை உண்டாக்கிறது. இது தொடர்பாக பிஆர்பழனிச்சாமிக்கு சொந்தமான கிரானைட் நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மேலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

கிரானைட் வெட்டி எடுத்ததில் முறைகேடு செய்ததாக மதுரையில் உள்ள சிந்து என்ற கிரானைட் நிறுவனம் மீதும் புகார் உள்ளது.  இந்த நிறுவனம் செல்வராஜ் என்பவருக்குச் சொந்தமானது. இதனிடையே கிரானைட்டை வெட்டி எடுப்பதில் இந்த நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் எழுந்த குற்றச்சாட்டு குறித்து ஏற்கெனவே அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்திவந்தனர். இந்த நிலையில் அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான 106 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறையினர் இன்று திடீரென முடக்கியுள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!