விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம்!

பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டிலிருந்து எந்தப் பயங்கரவாத செயல்களிலும் ஈடுபடாததால் விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் நீக்கியுள்ளது!

ltee

கடந்த 2006-ம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஐரோப்பிய யூனியன் தடை விதித்தது. ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து விடுதலைப் புலிகள் இயக்கம் 2011இல் லக்சம்பர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.  இந்த வழக்கில் விடுதலைப் புலிகள் சார்பில் நெதர்லாந்து வழக்கறிஞர் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 2014-ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் போது ’2009-ம் ஆண்டுக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பு ஆயுதம் ஏந்தவில்லை, வன்முறையற்ற வழிகளில்தான் போராட விரும்புகின்றனர்’ என்று வாதிடப்பட்டது. 

இந்நிலையில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கியுள்ளது. 2009க்கு பிறகு எந்த வன்முறை செயலிலும் ஈடுபடாததால் தடை நீக்கப்படுவதாகவும், இந்த அமைப்புக்குத் தாக்குதல் நடத்தும் திறன் இருப்பதற்கான எந்த ஆதாரமும் அளிக்கவில்லை எனக்கூறி தடையை நீக்கி ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!