Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம்: அரசியல் கட்சிகள் வரவேற்பு!

விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர், பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்கப்பட்டத்தற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் வரவேற்றுள்ளனர். 

ltte

இலங்கையை மையமாகக் கொண்டு இயங்கிய விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பல நாடுகள் பயங்கரவாத அமைப்பாக அறிவித்து தடை செய்திருந்தன. 2006-ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியம் பயங்கரவாத பட்டியலில் சேர்த்திருந்தது. விடுதலைப் புலிகள்  அமைப்பால் இனி ஆபத்து என்று நிரூபிக்கத் தற்போது போதிய ஆதாரங்கள் இல்லாத நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத பட்டியலிலிருந்து  நீக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2014-ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இன்னும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட  பட்டியலில் இருக்கிறது.  

ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியது குறித்து கருத்து தெரிவித்துள்ள திருமாவளவன் ’விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியது எதிர்காலத்துக்கான திருப்புமுனையாக அமையும்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close