Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நீட் தேர்வைக் கண்டித்து பள்ளி மாணவர்கள் மனிதச் சங்கிலி!

 

மனிதச் சங்கிலி

 

தமிழக மாணவர்கள் மீது மத்திய அரசு நீட் தேர்வைத் திணிப்பதைக் கண்டித்து சமத்துவ கல்விக் கூட்டமைப்பு சார்பாக மாணவர்கள் பங்கேற்ற மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் நீட் தேர்வு அமல்படுத்தக் கூடாது என அனைத்து அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சமத்துவ கல்விக் கூட்டமைப்பு சார்பாக நெல்லையில் இன்று மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களான பிரிட்டோ, அந்தோணிகுரூஸ், ஜான்கென்னடி, கிப்சன் ஜான்தாஸ், முபாரக், உஸ்மான்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்தபடியே கரம் கோர்த்து மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மனிதச் சங்கிலி

போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள், ’நீட் தேர்வு வேண்டாம்’ ’நீட் தேர்வைத் திணிக்காதே, ‘தமிழகத்தில் நீட் தேர்வை அனுமதிக்காதே’ போன்ற கோஷங்களை எழுப்பினர். அத்துடன், மாணவ மாணவிகள் நீட் தேர்வை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடியே மனிதச் சங்கிலியில் பங்கேற்றனர். 

பாளையங்கோட்டை தெற்கு பஜார் பகுதியிலிருந்து, லூர்துநாதன் சிலை, வ.உ.சி.மைதானம், நூற்றாண்டு மண்டபம், இக்னேஷியஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வழியாக கிறிஸ்துராஜா மேல்நிலைப்பள்ளி வரை மனிதச் சங்கிலி போராட்டத்தில் 4000-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவர்களின் பெற்றோர்கள் பலரும் இந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றதையும் காணமுடிந்தது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement