Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கலாம் பெயரால் நடக்கட்டும் நல்ல விஷயங்கள்....!

மக்கள் அனைவராலும் விரும்பப்படும் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் இரண்டாம் ஆண்டு  நினைவு தினத்தில் ராமேசுவரத்தில் அழகிய நினைவு மண்டபத்தை திறந்து வைக்கிறார் பிரதமர். இதை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது. 

அது மட்டுமல்லாமல் கலாமின் நினைவு நாளை தங்கள் உறவினரின் நினைவு நாளைப்போல நினைத்து தனி மனிதர் முதல், பல்வேறு அமைப்புகள், வர்த்தக நிறுவனங்கள்வரை பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். வசந்த் அன்கோ தன்னுடைய அனைத்து கிளைகளிலும் மரக்கன்றுகளை வழங்குகிறது. இன்னும் சிலர் கல்வித்திருவிழாவாக நடத்துகிறார்கள். கலாம் பெயரைச் சொல்லி சிலர் நடைப்பயணம் செல்கிறார்கள். பலர் தங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.


அந்த வகையில் ரத்த தானம் செய்வதற்காக மிகப்பெரிய நெட்ஒர்க்குடன் செயல்பட்டு வரும் மதுரையைச் சேர்ந்த 'பலகரங்கள்' என்ற அமைப்பு, அப்துல்கலாம் சர்வதேச அமைப்புடன் இணைந்து மாபெரும் ரத்ததான முகாமை விஷால்மாலில் நடத்த உள்ளனர். இந்த முகாமில் சேகரிக்கப்படும் அனைத்து ரத்தமும் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள். இந்த முகாமில் சினிமா பிரபலங்கள், அரசு அதிகாரிகள், உள்ளூர்  பிரபலங்கள் கலந்துகொள்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் மரக்கன்று வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close