தந்தை குடியரசுத் தலைவர், மகள் விமான பணிப்பெண்!

நாட்டின் முதல் குடிமகனாகியிருக்கிறார் ராம்நாத் கோவிந்த். முதல் குடிமகனுக்கு ஸ்வாதி என்ற மகள் இருக்கிறார். அவர், ஏர் இந்தியாவில் விமானப் பணிப்பெண்ணாக இருக்கிறார். குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்பதற்கு முன்னர், பீகார் மாநில கவர்னராகவும் இருந்திருக்கிறார். கவர்னர் மகளாக இருந்தாலும் விமானத்தில் பணிப் பெண் வேலையைத் தொடர்ந்து செய்து வந்தார். 

குடியரசுத் தலைவர் மகள் ராம்நாத் கோவிந்த் மகள் ஸ்வாதி

இன்னொரு விசேஷம் என்னவென்றால், ஸ்வாதி தன்னை ஒரு கவர்னரின் மகள் என்று சக ஊழியர்களிடம்கூட சொல்லிக்கொண்டது இல்லை. ஸ்வாதி தொடர்பான அலுவலகக் குறிப்புகளில், தந்தை பெயர் ஆர்.என்.கோவிந்த் என்றும் தாயாரின் பெயர் சவிதா  எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போதுதான், குடியரசுத் தலைவரின் மகள் இவர் எனத் தெரியவந்துள்ளது. இதனால், சக ஊழியர்கள்  வியப்பும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். 

தந்தை குடியரசுத் தலைவர் ஆகிவிட்டதால், இனிமேல் விமானப் பணிப்பெண் வேலையைத்  தொடர்வீர்களா எனக் கேட்டால், 'ஆம்' என ஸ்வாதியிடமிருந்து கூலாக பதில் வருகிறது.  ''என் தந்தை உழைப்பால்தான் உயர்ந்திருக்கிறார். எங்களை நன்றாகப் படிக்கவைத்தார். ஒவ்வொருவரும் சுதந்திரமாக தனித் தன்மையுடன் இருப்பதையே விரும்புவார். குடியரசுத் தலைவராக இருந்தாலும் நான் சுயத்தை இழப்பதை அவர் விரும்ப மாட்டார் '' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!