Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

108 அம்மன் திருத்தலங்கள்- 5 நாள்கள் ஆன்மீகச் சுற்றுலா! #ஆடிஸ்பெஷல்

தமிழகத்தில், ஆடி மாதத்தில் அம்மனுக்கு விசேஷ பூஜை வழிபாடுகள் சிறப்பான அளவில் நடைபெறுவது வழக்கம். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்துவருகின்றனர். இதையொட்டி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் 108 அம்மன் திருத்தலங்கள் சென்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

அம்மன் திருத்தலங்கள்

தமிழகம் முழுவதும் உள்ள 108 அம்மன் கோயில்களுக்கு 5 நாள்களில் சென்றுவர கட்டணமாக 5,500 ரூபாயும் சிறுவர்களுக்கு 4,900 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. தனிநபருக்கு தனி அறை வசதியுடன் 6,500 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் சென்னையிலிருந்து பஸ் புறப்படும். ஐந்து நாள்களில் சுற்றுலாவை முடித்துக்கொண்டு, 5-ம் நாள் இரவு பஸ் சென்னையை வந்தடையும். பயண நாள்களில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித்துறை ஓட்டலில் பக்தர்கள் தங்க வைக்கப்படுவார்கள்
இதில் சென்னை காளிகாம்பாள், திருச்சி உறையூர், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன், சமயபுரம், மதுரை மீனாட்சி அம்மன் ஆகிய முக்கியமான 108 அம்மன் கோயில்களுக்கு சுவாமியை சிறப்புதரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித்துறை தொலைபேசி எண்களான 044-25333444, 25333333,25333857,25333385  ஆகியவற்றில் தொடர்புகொண்டு அறியலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close