புதிய KUV100 ல் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் என்ன தெரியுமா?

கடந்த வருடம் ஹேட்ச்பேக் காரான KUV100 காரை அறிமுகம் செய்தது மஹிந்திரா. ஹூண்டாய் கிராண்ட், i10, மாருதி ஸ்விஃப்ட் மற்றும் டிஸையர் ஆகிய கார்களுக்குப் போட்டியாக KUV100 இருக்கிறது. மஹிந்திராவின் டிரேட் மார்க் டிஸைன்தான் என்றாலும், தோற்றத்தில் மிரட்டுகிறது KUV100. முன்பக்கம் இருந்து பார்த்தால் உயரமாக இருக்கிறது. 

டிஸைனும், தோற்றமும் இன்னும் அசத்தலாக இருக்க வேண்டும் என காரில் சில மாற்றங்களைச் செய்துள்ளது மஹிந்திரா நிறுவனம். இதற்காக KUV100 காரின் முன்பக்க பம்பரின் டிஸைனை மாற்றி அமைத்திருக்கிறார்கள்.

 

அதுபோல் பின்பக்கத்தில் உள்ள டெயில் கேட் பகுதியும் சற்று உள்பக்கமாக அடங்கியவாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களுக்கேற்ப ஹெட்லைட் ஸ்டைலும் புதிதாக மாறியிருக்கிறது. ஆனால் விலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது எனச் சொல்கிறார்கள்.  புதிய வெர்ஷனுக்கு S106 என டம்மி பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சுற்றி தீவிரமாக டெஸ்ட் செய்து வரும் இந்தக் காரை மோட்டார் விகடன்தான் முதலில் படம் பிடித்து வெளியிடுகிறது. அடுத்த சில மாதங்களில் புதிய மாற்றங்களுடன் KUV100 வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!