வெளியிடப்பட்ட நேரம்: 16:14 (27/07/2017)

கடைசி தொடர்பு:16:14 (27/07/2017)

பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கிவைத்த பிரசார வாகனம்

பிரதமர் மோடி கொடி அசைத்து துவக்கி வைத்த பிரச்சார வாகனம்


மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தை அடுத்த பேய்க்கரும்பு பகுதியில், அப்துல் கலாமின் நினைவிடம் உள்ளது. இங்கு, மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சார்பில், அப்துல் கலாம் மணிமண்டபம் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. ரூ.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைத்தார். இந்த விழாவில் கலந்துகொள்ள, தனி விமானத்தில் டெல்லியிலிருந்து  புறப்பட்டு மதுரை வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் சென்றார். பிறகு, கார் மூலம் விழா இடத்துக்குப் போனார். இந்த விழாவின் முக்கிய அம்சமாக, ராமேஸ்வரத்திலிருந்து டெல்லி வரை செல்ல உள்ள 'அப்துல் கலாம் - 2020' என்கிற சாதனை பிரசார வாகனத்தை, மோடி கொடி அசைத்துத் துவக்கிவைத்தார். அப்போது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க-வின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் வெங்கைய நாயுடு உள்ளிட்டோர் அருகில் இருந்தனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க