Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'பிக்பாஸில் கோபத்தைக் குறைக்கலாமே காயத்ரி!' - சீரியல் ஹீரோவின் ஆதங்கம்

காலையில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தவுடன், 'இன்னைக்கு ரொமான்ஸ் சீன் உண்டா?' என்று கேட்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார், 'நீலி' சீரியல் ஹீரோ நவின் என்கின்றனர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள். ''ரொமான்ஸ் செய்வதில் எனக்கு ஆர்வம் இல்லை. என்னுடைய இயல்பே அப்படித்தான்'' என்கிறார் நவின். அவரிடம் பேசினோம்...
  
'பிக் பாஸ்' நிகழ்ச்சியைப் பார்க்கிறீர்களா? 

’’நடிகர், நடிகைகள் முதல்முறையாக நடிக்காமல் இருப்பதை அந்த நிகழ்ச்சியில் பார்க்க முடிகிறது. அவர்களது உண்மையான கேரக்டரைப் பார்க்க முடிகிறது. எனக்கு வாய்ப்பு வந்தால், கண்டிப்பாக அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பேன். குறிப்பாக, கமல் சாரைப் பார்ப்பதற்காகவே அந்த நிகழ்ச்சிக்குச் செல்வேன்.’’

பிக் பாஸில் உங்களுக்குப் பிடித்தது யார்? 

’’என்னுடைய ஓட்டு ஓவியாவுக்குத்தான். மக்கள் ஆதரவு ஓவியாவுக்கு இருக்கும்போது நான் மட்டும் எப்படி மாத்தி ஓட்டுப்போடுவேன்? பிக்பாஸ் வீட்டில் எதார்த்தமாக இருப்பது ஓவியா மட்டும்தான். சினிமா உலகில் காயத்ரி சீனியர். அவரைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. சில விஷயங்களில் அவர் கவனம் செலுத்த வேண்டும். ஒருவரைப் பற்றி  இன்னொருவர் குறை சொன்னால், அவர் சரியாகத்தான் சொல்கிறாரா என்பதைத் தெரிந்துகொண்டு பேசவேண்டும்.  வார்த்தைகளைக் கொட்டிவிட்டால் அள்ள முடியாது. கோபத்தைக் குறைத்தால் நல்லது. ஜூலியைப் பற்றித்தான் ஊரே பேசுகிறதே..!’’

 'நீலி' சீரியல் ஹீரோ நவின்

உங்களுக்கு ரொமான்ஸ் மீது ஏன் அப்படி ஒரு வெறுப்பு? 

"நிஜத்திலும் நான் அப்படித்தான். சன் டி.வி-யில் கங்கா சீரியலில் நடித்த நேரத்தில், 'நீலி' சீரியலில் நடிக்க அழைப்பு வந்தது. என்னுடைய ரோலை டைரக்டர் சொன்னதும் முதலில் தயங்கினேன். இந்த சீரியலில் எனக்கு அப்பா வேஷம். இந்தச் சின்ன வயசுல அப்பா வேஷம் என்றதும் என்னுடைய எதிர்காலம்குறித்த யோசனைதான் அதிகம் இருந்தது. முழுக் கதையும் கேட்ட பிறகுதான் சம்மதம் தெரிவித்தேன். ரொமான்ஸ் சீனில் நடிக்கத்தான் தயக்கமாக இருக்கிறது. மத்தபடி எங்கள் சீரியலில் எல்லோரும் எனக்கு நெருக்கமான நண்பர்கள்.’’

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close