போதைப் பொருள் வழக்கு: நடிகை முமைத் கான் ஆஜர்! | Actress Mumaith Khan appears before special investigation team in drug case

வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (27/07/2017)

கடைசி தொடர்பு:17:50 (27/07/2017)

போதைப் பொருள் வழக்கு: நடிகை முமைத் கான் ஆஜர்!


முமைத் கான்

ஆந்திர மாநிலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருவது போதைப் பொருள் வழக்கு. அம்மாநிலத்தில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்களைப் புழக்கத்தில் விடப்பட்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அதுவும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இது விநியோகிக்கப்பட்டிருக்கிறது என்கிற தகவல்களும் உலவி வருகின்றன.

இந்த வழக்கில் தெலுங்கு திரைத்துறையில் உள்ள பலருக்கும் தொடர்புள்ளது எனத் தெரியவந்தபோது பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியது.  இந்த வழக்குத் தொடர்பாக நடிகர் நவ்தீப், தருண்குமார், இயக்குநர் சின்னா உள்ளிட்ட பலரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகை சார்மியிடம் இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடந்தது. சார்மி, ஹைதாராபாத்தில் உள்ள கலால் துறை அலுவலகத்தில் விசாரணக்கு ஆஜரானார். அவர் தன்னை விசாரிக்கும்போது, பெண் காவலர் உடனிருக்க வேண்டும் என்று கோரியிருந்தார். 

அந்த வரிசையில் இன்று நடிகை முமைத் கான் விசாரணைக்கு ஆஜரானார். இன்று காலை, 10 மணியளவில் சிறப்பு புலனாய்வுக் குழுவின் குழு (Special Investigation Team) முன், ஆஜராகி அவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.