வெளியிடப்பட்ட நேரம்: 15:56 (27/07/2017)

கடைசி தொடர்பு:17:44 (27/07/2017)

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தீ விபத்து!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 10 வது நடைமேடையில் நின்றிருந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்தத் தீ விபத்தில் எந்த வித உயிர்ச்சேதமோ பொதுமக்களுக்குக் காயமோ ஏற்படவில்லை. ரயில் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தீ விபத்தால், சென்ட்ரல் ரயில் நிலையம் சற்று பரபரப்பாகக் காணப்படுகிறது.