ஆந்திராவில் மணிக்கு 1,200 கி.மீ வேகத்தில் பயணிக்கும் ஹைப்பர் லூப் ரயில்?

hyper loop

அமெரிக்காவை மையமாகக் கொண்ட ஹைப்பர் லூப் ஒன் என்ற நிறுவனம் ஆந்திர அரசுடன் இணைந்து ஹைப்பர் லூப் போக்குவரத்து பற்றிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இப்போக்குவரத்து பயன்பாட்டிற்கு வந்தால் ஆந்திரத் தலைநகர் அமராவதியிலிருந்து விசாகப்பட்டினத்துக்கு 23 நிமிடங்களில் செல்ல முடியும். அமராவதியிலிருந்து பெங்களூர் நகரத்துக்கு 23 நிமிடங்களில் செல்ல முடியும். இது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நேற்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்டு செயல்முறை விளக்கமளித்த ஹைப்பர் லூப் ஒன் நிறுவன அதிகாரிகள் பேசும்போது ஹைப்பர் லூப் போக்குவரத்து பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்கிறார். இப்போக்குவரத்து பயன்பாட்டுக்கு வந்தால் விமானப் பயண நேரத்தைவிட குறைவான நேரமே செலவாகும். திட்டமிட்டபடி அமைந்தால் நிச்சயம் போக்குவரத்து வரலாற்றில் இது ஒரு மைல்கல்தான். இதன் பயண வேகம் மணிக்கு 1,200 கிலோமீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!