திருப்பதி பக்தர்களுக்கு மீண்டும் சனி, ஞாயிறுகளில் திவ்ய தரிசன அனுமதி!

திருப்பதிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. திருமலைக்கு மலைப்பாதையின் வழியாக நடைப்பயணமாக வந்து திவ்ய தரிசனம் செய்பவர்களின் எண்ணிக்கை சமீப வருடங்களில் கணிசமான அளவு உயர்ந்துவிட்டது.

திருப்பதி

இது தவிர ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வாங்கியவர்கள், சிறப்பு தரிசன டிக்கெட் வாங்கியவர்கள் சர்வ தரிசனத்தில் வருபவர்கள் எனக் கிட்டத்தட்ட 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பேர் வரை வருகின்ற நிலை ஏற்பட்டது. இதனால் சுவாமி தரிசனம் செய்ய நீண்டநேரம் ஆனது.
இதைத்தொடர்ந்து, திருமலை திருப்பதி தேவஸ்தானம் மலைப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் திவ்ய தரிசன டிக்கெட்டுகளை வாரத்தின் இறுதி நாள்களான சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களும் நிறுத்திவைத்தது.

மலைப்பாதை

இந்த நிலையில் கடந்த வாரம் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் திவ்ய தரிசன டிக்கெட்டுகள் மட்டும் வழங்குவதென முடிவு செய்யப்பட்டது. இதன்படி பரீட்ச்சார்த்தமாக அலிப்பிரி பாதையில் வரும் பக்தர்களில் 14 ஆயிரம்பேருக்கும் ஶ்ரீ வாரிமெட்டு பாதையில் வருபவர்களுக்கு 6 ஆயிரம் டிக்கெட்டுகளும் வழங்கப்பட்டன. அவர்கள் மலைக்கு வந்ததும், இரண்டரை மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்தனர். மற்றவர்களுக்கும் எந்தச் சிரமமும் ஏற்படவில்லை. இதனால் மீண்டும் திவ்ய தரிசன டிக்கெட்டுகள் சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் மட்டும் வழங்கப்படும் எனத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!