லிச்சி பழத்தில் கலந்துள்ள எண்டோசல்ஃபான்... எச்சரிக்கும் ஆய்வு!

லிச்சி பழம்

ஆறு மாதத்துக்கு முன்னர் பீகாரில் லிச்சி பழம் உண்ட குழந்தைகள் உயிரிழந்தனர். அப்போது இந்திய-அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின் முடிவில், லிச்சி பழத்தால் 1,000 குழந்தைகள் வரை உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், வெறும் வயிற்றில் இந்தப் பழத்தை உண்பதால் உயிரைப் பறிக்கும் என்ற கருத்துக்களும் பரவியது. இது குறித்து வெப்ப மண்டல மருத்துவ மற்றும் சுகாதாரத்திற்கான அமெரிக்கன் இதழ் ஆய்வு நடத்தியது. அதன்படி, குழந்தைகள் உண்ட லிச்சி பழத்தில் அதிகமான என்டோசல்ஃபான்கள் தெளிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பழத்தை உண்ணும் சிலருக்கு மூளை சம்பந்தப்பட்ட பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இந்த என்டோசல்ஃபான் ஆனது, கடந்த 2011-ம் ஆண்டு இந்தியாவில் தடை செய்யப்பட்டது. லிச்சி பழங்களை உண்ணும் சிலர் மாலை உணவுகளைத் தவிர்ப்பதால் இரத்தத்தில் குளுகோஸ் அளவு குறைவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 2014-ம் ஆண்டு பீகாரில் லிச்சி பழம் சாப்பிட்ட 122 குழந்தைகள் இறந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வு லிச்சி பழப் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!